'சீக்கியர்களின் தலைப்பாகையுடன் ஹிஜாபை ஒப்பிடக்கூடாது'

Added : செப் 09, 2022 | |
Advertisement
புதுடில்லி:'கல்வி நிலையங்களில் மாணவிகள், 'ஹிஜாப்' அணிவதை, சீக்கியர்களின் தலைப்பாகையுடன் ஒப்பிடுவது முறையல்ல' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.கர்நாடகாவில், கல்வி நிலையங்களில் வகுப்பறைக்குள் முஸ்லிம் மாணவிகள், 'ஹிஜாப்' எனப்படும், முகத்தை மறைக்கும் துணியை அணிவதற்கு, அம்மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, கர்நாடகா உயர்

புதுடில்லி:'கல்வி நிலையங்களில் மாணவிகள், 'ஹிஜாப்' அணிவதை, சீக்கியர்களின் தலைப்பாகையுடன் ஒப்பிடுவது முறையல்ல' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கர்நாடகாவில், கல்வி நிலையங்களில் வகுப்பறைக்குள் முஸ்லிம் மாணவிகள், 'ஹிஜாப்' எனப்படும், முகத்தை மறைக்கும் துணியை அணிவதற்கு, அம்மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீக்கிய மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு தலைப்பாகை அணிந்து வர அனுமதிக்கப்படுவதை குறிப்பிட்டு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கேஷ், க்ரிபான், கன்கா, கடா, கச்சா எனப்படும், தாடி மற்றும் தலை முடியை சவரம் செய்யாமல் இருப்பது, சிறிய கூர்மையான கத்தியை எப்போதும் வைத்திருப்பது, தலை சீவ மரத்தாலான சீப்பு வைத்திருப்பது, கையில் வளையம் அணிவது, வெள்ளை நிற உள்ளாடை அணிவது ஆகியவை சீக்கியர்களுக்கான ஐந்து கோட்பாடாக வகுக்கப்பட்டுள்ளது.

தலைப்பாகை அணிவதும் அதில் ஒரு அங்கம் தான். அதை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளன. எனவே, சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதை, ஹிஜாப் விவகாரத்துடன் ஒப்பிடுவது முறையல்ல. அது இந்திய கலாசாரத்துடன் முற்றிலும் ஒன்றி விட்டது.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணை செப்., 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X