விபசார 'புரோக்கராக' மாறிய போலீஸ்காரர் கைது

Added : செப் 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை:மதுரையில் விபசார தொழில் செய்து வந்த, கொட்டாம்பட்டி போலீஸ்காரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை டி.ஆர்.ஓ., காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதை அறிந்து போலீசார் சோதனையிட்டனர்.அங்கிருந்த சுமதி, 37, கண்ணனேந்தல் போலீஸ்காரர் தேவேந்திரன், 49, செல்லுார் ஆட்டோ டிரைவர் காசி, 42, ஆகியோரிடம் விசாரித்தனர். இதில் சுமதி பல முறை விபசார
விபசார 'புரோக்கராக' மாறிய போலீஸ்காரர் கைது

மதுரை:மதுரையில் விபசார தொழில் செய்து வந்த, கொட்டாம்பட்டி போலீஸ்காரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை டி.ஆர்.ஓ., காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதை அறிந்து போலீசார் சோதனையிட்டனர்.

அங்கிருந்த சுமதி, 37, கண்ணனேந்தல் போலீஸ்காரர் தேவேந்திரன், 49, செல்லுார் ஆட்டோ டிரைவர் காசி, 42, ஆகியோரிடம் விசாரித்தனர். இதில் சுமதி பல முறை விபசார வழக்கில் சிக்கியவர். ஏழை பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவது தெரிந்தது.இவருக்கு 'பார்ட்னராக'வும், புரோக்கராகவும் போலீஸ்காரர் தேவேந்திரன் இருந்துள்ளார். இவர்களிடம் இருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களில், 20 வயது பெண் சுமதியின் மகள். பெற்ற மகளையே தாய் விபசாரத்தில் ஈடுபடுத்தியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுமதி, தேவேந்திரன், காசி ஆகியோரை தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.தேவேந்திரன் மூன்று மாதங்களுக்கு முன் விபசார ரெய்டின்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். அப்போது அவரை வாடிக்கையாளர் என கருதி போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தற்போது மீண்டும் ரெய்டில் அவர் சிக்கிய போது தான் புரோக்கர் என்பதும், சுமதியுடன் கூட்டுச்சேர்ந்து 'தொழில்' நடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை 'சஸ்பெண்ட்' செய்ய மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
14-செப்-202214:09:48 IST Report Abuse
Tamilnesan நன்கு கவனியுங்கள். "அவரை 'சஸ்பெண்ட்' செய்ய மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் நடவடிக்கை எடுத்துள்ளார்". டிஸ்மிஸ் செய்யவில்லை. கையும் களவுமாக பிடிபட்டவரை டிஸ்மிஸ் செய்யவில்லை. வேறு ஒரு ஊருக்கு பணி மாறுதல் செய்யப்படுவார். அந்த ஊரில் மாட்டாதபடி திறமையாக தன் தொழிலை காட்டுவார். குற்றவாளிகளுக்கு அரசே துணை போகும் அவலம் தமிழ்நாட்டில் தான் நடக்கும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
09-செப்-202214:53:24 IST Report Abuse
raja காவல் துறை யாருகிட்ட இருக்கு அப்புறம் மாறாம என்ன பண்ணுவானுவோ.....
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
09-செப்-202208:47:09 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இப்படி பலர் இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X