தானியங்கி பட்டா மாறுதலில் மீண்டும் சிக்கல்

Added : செப் 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:பத்திரப்பதிவு அடிப்படையில் செயல்படுத்தப்படும் தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை.இப்பிரச்னைக்கு தீர்வாகபத்திரப்பதிவு

சென்னை:பத்திரப்பதிவு அடிப்படையில் செயல்படுத்தப்படும் தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை.இப்பிரச்னைக்கு தீர்வாகபத்திரப்பதிவு அடிப்படையில் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றும் திட்டம் 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் விற்கப்படும் நிலையில் அதற்கான பட்டாவில் தானியங்கி முறையில் பெயர் மாற்ற முடியும்.இதில் சொத்து விற்பனை தொடர்பான பத்திரத்தை பதிவு செய்யும் சார் - பதிவாளர் விற்பனையாளர் வாங்குபவர் ஆகியோரின் அடையாள சான்றுகளை கணினி வழியே உறுதிபடுத்த வேண்டும். இதற்கு ஆதார் அட்டை அவசியம்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:ஒரு நபரிடம் இருந்து முழு சொத்தையும் வாங்கும் போது அவர்களின் அடையாள சான்று உறுதியானால் போதும் என்ற அடிப்படையில் பட்டா மாறுதல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் சொத்து விற்கும்நபர் பெயரில் பட்டா இருக்கவேண்டும். விற்பவர் வாங்குபவர் இருவரும் ஆதார் அட்டை விபரங்களை அளிக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.

பதிவுத் துறை தரப்பில் பணிகள் முடிக்கப்பட்டாலும் வருவாய்த் துறை இணையதளத்தில் 'ஆன்லைன்' முறையில் பட்டா மாறுதல் முடிவது இல்லை. பத்திரப்பதிவு முடிந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆனாலும் இது குறித்த எந்த தகவலும் வருவதில்லை.மக்கள் நலன் கருதி அரசு துவக்கிய இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வருவாய் துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
09-செப்-202210:11:06 IST Report Abuse
P.Sekaran வருவாய் துறையினரின் வருமானத்தை நிறுத்தினால் அவர்கள் சும்மா விடுவார்களா? ஒரு மாற்றதிற்கு ரூபாய் ஐந்தாயிரம் முதற்கொண்டு வாங்கிவுடன் வேலையை ஆரம்பிப்பார்கள். சிலர் பணம் கொடுத்தும் ஏமாறும் மனிதர்களும் உள்ளனர். இது கண் கூடாக நடைபெறும் செயல்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X