வனப்பகுதிகளை அதிகரிக்க 23 லட்சம் மரக்கன்றுகள்

Added : செப் 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திண்டுக்கல்--காடுகளை அதிகப்படுத்தும் பசுமை தமிழகம் திட்டத்தில் 23 லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளதாக'',திண்டுக்கல் வன அலுவலர் எஸ்.பிரபு தெரிவித்தார்.காடுகளை மேம்படுத்த அரசு திட்டங்கள் என்ன தமிழக அரசு சார்பில் பசுமை தமிழகம் எனும் திட்டம் அறிமுகப்படுத்தி 22 சதவீதமாக உள்ள காடுகளை 10 ஆண்டில் 33 சதவீதமாக உயர்த்த ஏற்பாடுகள் நடக்கிறது.அந்த வகையில் திண்டுக்கல்லில்
வனப்பகுதிகளை அதிகரிக்க 23 லட்சம் மரக்கன்றுகள்



திண்டுக்கல்--காடுகளை அதிகப்படுத்தும் பசுமை தமிழகம் திட்டத்தில் 23 லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளதாக'',திண்டுக்கல் வன அலுவலர் எஸ்.பிரபு தெரிவித்தார்.காடுகளை மேம்படுத்த அரசு திட்டங்கள் என்ன தமிழக அரசு சார்பில் பசுமை தமிழகம் எனும் திட்டம் அறிமுகப்படுத்தி 22 சதவீதமாக உள்ள காடுகளை 10 ஆண்டில் 33 சதவீதமாக உயர்த்த ஏற்பாடுகள் நடக்கிறது.அந்த வகையில் திண்டுக்கல்லில் வனப்பகுதிகள், பள்ளிகள், கல்லுாரிகள்,விவசாய நிலங்களில் 23 லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளோம்.வனவிலங்குகள் வேட்டை அதிகம் நடக்கிறதே...வனப்பகுதிகளுக்குள் அனுமதியின்றி சுற்றுபவர்கள்,அனுமதியின்றி துப்பாக்கிவைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறதுவன விலங்குகளை வேட்டையாடினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படுகிறது.பிரிவுகளுக்கு ஏற்றவாறு தண்டனை,அபராதம் விதிக்கப்படும்.சமீபத்தில் திண்டுக்கல்லில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.அரியவகை விலங்கினங்கள் அழிந்து வருகிறதே... அழிந்து வரும் வன விலங்குகளை காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. காட்டுப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அறிவுரையும் வழங்கி வருகிறோம். வேட்டையாடுபவர்களை கண்காணிக்க வத்தலகுண்டு,கன்னிவாடி,ஓட்டன்சத்திரம்,சிறுமலை போன்ற மலைப்பகுதிகளில் 24 மணிநேரமும் வனப்பாதுகாவலர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். வனவிலங்குகள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளதா போதுமான விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது.தற்போது வனவிலங்குகளைவேட்டையாடுபவர்கள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கின்றனர்.அவர்களும் கூறும் தகவலும் ரகசியமாக வைக்கப்படுகிறது.வனவிலங்குகளின் இறைச்சி விற்பனைகள் குறித்தும் விசாரணை நடத்துகிறோம்.வனத்துறையில் போதுமானளவில் பணியாளர்கள் உள்ளார்களா... திண்டுக்கல்லில் வனகாப்பாளர்கள் 45 ,காவலர்கள்50 என 250 பேர் பணியில் உள்ளனர். யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அதனை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்.வனவிலங்குளால் சேதமான பயிர்களுக்கு நிவாரண நிதி முறையாக வழங்கப்படுகிறதா...வனவிலங்குகளால் சேதமான பயிர்களுக்கு விவசாயிகளுக்கு அரசு நிவாரண நிதி முறையாகபெற்றுகொடுக்கப்படுகிறது. அதில் எவ்வித தொய்வும் இல்லை, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
09-செப்-202209:04:25 IST Report Abuse
Sampath Kumar ஏற்ப பார்த்தாலும் யாரை பார்த்தாலும் பல வருசமாக்க சொல்லி வருகிறார்கள் லச்சக்கணக்கில் மரம் நடுக்கிரோம் என்று அப்படி பார்த்தால் இன்னேரம் தமிழ்நாடு கடக்க மாரி இருக்கும் அப்படி ஒன்னும் தெரிய வில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X