காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை: தேனி துணை இயக்குனர் தகவல்

Added : செப் 09, 2022 | |
Advertisement
தேனி -'2025க்குள் காசநோய் இல்லாத தேனி மாவட்டத்தை உருவாக்க வீடுகள் தோறும் சென்று ஆய்வுகள் செய்ய 'மொபைல் எக்ஸ்ரே' வாகனம் மூலம் ஆய்வுகள் நடந்து வருகின்றன. காசநோய் அறிகுறிகள் அறிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பூரண குணமடையலாம்.'' என, மாவட்ட காசநோய் ஒழிப்புத்துறை துணை இயக்குனர் இரா.ராஜபிரகாஷ் தெரிவித்தார்.பெரியகுளம் அரசு பொது மருத்துவமனையில் காசநோய்
காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை: தேனி  துணை இயக்குனர் தகவல்

தேனி -'2025க்குள் காசநோய் இல்லாத தேனி மாவட்டத்தை உருவாக்க வீடுகள் தோறும் சென்று ஆய்வுகள் செய்ய 'மொபைல் எக்ஸ்ரே' வாகனம் மூலம் ஆய்வுகள் நடந்து வருகின்றன. காசநோய் அறிகுறிகள் அறிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பூரண குணமடையலாம்.'' என, மாவட்ட காசநோய் ஒழிப்புத்துறை துணை இயக்குனர் இரா.ராஜபிரகாஷ் தெரிவித்தார்.பெரியகுளம் அரசு பொது மருத்துவமனையில் காசநோய் ஒழிப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறியும் ஆய்வுகள், சளி பரிசோதனைகளை அதிகரித்து 2025க்குள் காசநோய் இல்லாத தேனி மாவட்டத்தை உருவாக்க எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகள், களப்பணிகள் குறித்து காசநோய் தடுப்புத்துறை துணை இயக்குனர் தினமலர் நாளிதழின் 'அன்புடன் அதிகாரி' பகுதிக்கு அளித்த பேட்டிகாசநோய் என்றால் என்னமைக்ரோபாக்டீரியம் டியூபர் குளோசிஸ்' என்கிற பாக்டீரியாவின் மூலம் காசநோய் ஏற்படுகிறது. உடலில் 90 சதவீதம் நுரையீரல் பாதிக்கும். மீதமுள்ள 10 சதவீதம் பிற உடல் பாகங்களில் பாதிப்பு ஏற்படுத்தும். மிகவும் ஆபத்தான தொற்று நோய் இது. இதன் அறிகுறிகளுக்கு அதிகபடியான கவனம் செலுத்துவது அவசியம். பாதிக்கப்பட்ட நபர் உமிழ்நீர் தும்மல், துப்புதல் உள்ளிட்டவை நடக்கும் போது உமிழ்நீரின் சிறிய துளிகள் காற்றில் வெளியேறுகிறது. அது காற்றில் பல மணி நேரம் உயிர்வாழக்கூடிய திறன் பெற்றது. அது பிற உடலில் சுவாசம் மூலம் நுழைந்து புதிய தொற்றை ஏற்படுத்துகிறது.அறிகுறிகள் என்னஇரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர் இருமல், காய்ச்சல், பசியின்மை, சளியில் ரத்தம் வெளியேறுவது, இரவு நேரங்களில் அதிக காய்ச்சல், குளிர்காலத்தில் அதிகளவில் வியர்த்தல், இருமும் போது மார்பில் வலி, எடை குறைதல், மூச்சு வாங்குதல் போன்றவை அறிகுளாகும். சளி பரிசோதனை மார்பு எக்ஸ்ரே எடுப்பது மூலம் காசநோயை பாதிப்பை உறுதிப்படுத்தலாம். 6 மாதம் தொடர் சிகிச்சை எடுத்தால் கட்டாயமாக பூரண குணமடையலாம்.நோய் ஒழிப்புப் பணிகள் குறித்து40 காசநோய் மேற்பார்வையாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிகின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மாதந்தோறும் சராசரியாக காசநோய் பாதிப்படைந்த 160 பேரை கண்டறிந்து வருகிறோம். அதுதவிர வீடுதோறும் மொபைல் எக்ஸ்ரே' வாகனம் நேரடியாக சென்று ஆய்வுகள், சளி பரிசோதனைகள் கடந்த மூன்று மாதங்களாக நடந்து வருகின்றன.பாதிக்கப்பட்டவர்கள் குறித்துகடந்த ஓராண்டில் மாவட்டத்தில் 1600 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து 1400 பேர் (85 சதவீதம்) தொடர் சிகிச்சையின் காரணமாகவும், விடாமுயற்சியில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டதன் காரணமாக குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 15 சதவீதம் பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மொபைல் எக்ஸ்ரே களப்பணிகள் மூலம் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியபட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.பாதுகாத்து கொள்வது எப்படிகாசநோய் பாதித்தவர்களின் வசிக்கும் வீட்டில் உள்ள உறவினர்கள் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். காசநோயாளிகள் புரத சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். இதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். பின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடையலாம். நோய் அறிகுறி அறிந்த உடனே சிகிச்சை எடுத்துக் கொள்வது கட்டாயம்.மாறாக காலதாமதம் செய்தால் நுரையீரல் பாதிப்பு, பிற உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் உடனடி சிகிச்சை எடுப்பது கட்டாயம்.நோய் கண்டறியும் பணிகள் நடக்கிறதாதனியார் டாக்டர்கள், மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து குணப்படுத்துகின்றனர். ஆனால் மாவட்ட காசநோய் மையத்திற்கு முறையான தகவல் அளிப்பது இல்லை. அவ்வாறு தகவல் அளிக்காமல் உள்ள டாக்டர்கள், மருத்துவமனைகள் குறித்து கலெக்டர் உத்தரவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை உடனடியாக அளிக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X