பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

Added : செப் 09, 2022 | |
Advertisement
போடி,- -போடி பழைய பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விபூதி அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில்,
பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை



போடி,- -போடி பழைய பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு விபூதி அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அமைந்துள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.* பெரியகுளம் கைலாச பட்டி கைலாசநாதர் கோயிலில், பிரதோஷம் வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டன.* சில்வார்பட்டி முனையடுவா நாயனார் கோயிலில் நடந்த பிரதோஷம் வழிபாட்டில், அதிகார நந்தி, காசி விஸ்வநாதர் ஆகியோருக்கு திருமஞ்சனம், மாபொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் நடந்தது. விநாயகர், முனையடுவா நாயனார், நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், நால்வர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவனடியார்கள் திருமுறைகள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சில்வார்பட்டி சிவனடியார்கள் செய்திருந்தனர்.* பெரியகுளம் காளகஸ்தீஸ்வரர் கோயிலிலும், கம்பம் ரோடு காளியம்மன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சிவ தரிசனம் பெற்றுச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X