முதல்வர் கவன கட்டுரை...

Added : செப் 09, 2022 | |
Advertisement
ஒரு நாட்டின் விரைந்த வளர்ச்சிக்கு போக்குவரத்துதான் முதன்மையானது. இதில் துறைமுகம், விமான நிலையம் முக்கியமானது. மதுரையைப் பொறுத்தவரை மேம்பட்ட விமான போக்குவரத்து மிகமிக அவசியமாக உள்ளது.இங்கு 520 ஏக்கரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விமான நிலையம் செயல்படுகிறது. இருப்பினும் சர்வதேச அந்தஸ்து இல்லாததால் வெளிநாட்டு தொடர்புகளுக்கு பெரும்பாலும் சென்னையை நம்பி இருக்க
முதல்வர் கவன கட்டுரை...

ஒரு நாட்டின் விரைந்த வளர்ச்சிக்கு போக்குவரத்துதான் முதன்மையானது. இதில் துறைமுகம், விமான நிலையம் முக்கியமானது. மதுரையைப் பொறுத்தவரை மேம்பட்ட விமான போக்குவரத்து மிகமிக அவசியமாக உள்ளது.

இங்கு 520 ஏக்கரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விமான நிலையம் செயல்படுகிறது. இருப்பினும் சர்வதேச அந்தஸ்து இல்லாததால் வெளிநாட்டு தொடர்புகளுக்கு பெரும்பாலும் சென்னையை நம்பி இருக்க வேண்டியுள்ளது. எனவே உள்ளூர் விமானங்கள் வந்து செல்லும் இந்த நிலையத்தின், தரத்தையும், கட்டமைப்பையும் மேம்படுத்துவது அவசியமானதாக உள்ளது. இதற்காக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பெரிய விமானங்கள் வந்துசெல்லும் வகையில் ரன்வேயின் நீளத்தை அதிகரிக்க, புதிய டெர்மினல்களை அமைக்க கூடுதல் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக பெருங்குடி, அயன்பாப்பாக்குடி, பாப்பனோடை, ராமன்குளம், குசவன்குண்டு, கூடல்செங்குளம் கிராமங்களில் 633 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க தமிழக அரசால் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.30 கோடி மட்டும் இன்னும் வழங்க வேண்டியுள்ளது.விமான நிலையத்தின் மொத்த இடம் 1100 ஏக்கரை தாண்டுவதால் இவற்றை சுற்றிலும் 15 கி.மீ., தொலைவுக்கு பாதுகாப்பு சுவர் கட்டுவதற்கு சமீபத்தில் ரூ.35 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

விரைவில் இப்பணி துவங்க உள்ளது. விமானங்கள் வந்து இறங்க தற்போதுள்ள ரன்வேயின் நீளத்தை மேலும் 2 கி.மீ., தொலைவுக்கு நீட்டிக்க வேண்டியுள்ளது. நீட்டிக்கும் ரன்வே பாதை, மதுரை - துாத்துக்குடி 4 வழிச்சாலையை கடக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் 500 மீட்டர் அகலத்திற்கு 'அண்டர் பாஸ்' அமைக்கலாமா, தற்போதைய 4 வழிச்சாலையை விமான நிலையத்திற்கு வெளியே சுற்றிச் செல்லும் வகையில் அமைக்கலாமா என்று ஆலோசனை நடக்கிறது. மைசூர், டில்லியில் உள்ளது போல இங்கும் 'அண்டர் பாஸ்' அமைக்கலாம்.விமான நிலைய விரிவாக்கத்திற்கு சில மாநிலங்களில் விமான போக்குவரத்து ஆணையமோ, மத்திய அரசோ செலவிடுகிறது. ஆனால் மதுரையில் முழுத்தொகையையும் தமிழக அரசே வழங்குகிறது.

நிலம் முழுவதும் கையகப்படுத்தி ஒப்படைத்த நிலையில், பணிகள் துவங்குவது தாமதமாக உள்ளது. ரன்வே அமைப்பது குறித்து துறை உயரதிகாரிகள் விரைந்து முடிவெடுத்து விரிவாக்க பணிகளை முடுக்கி விட வேண்டும். தென்மாவட்ட வளர்ச்சிக்கு இது பேருதவியாக இருக்கும் என்பதால் தமிழக அரசும் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X