குட்லாடம்பட்டி, வண்டியூர் சுற்றுலா திட்டங்கள் என்னாச்சு

Added : செப் 09, 2022 | |
Advertisement
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள குட்லாடம்பட்டியை சூழல் சுற்றுலாவுக்கான இடமாக 2014 ல் தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டது. 2018 ல் ரூ.30 லட்சம் செலவில் தடுப்புக்கம்பி, படிக்கட்டு, உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டன. கஜா புயலில் அனைத்தும் சேதமடைந்த நிலையில் மூன்றாண்டுகளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள குட்லாடம்பட்டியை சூழல் சுற்றுலாவுக்கான இடமாக 2014 ல் தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டது. 2018 ல் ரூ.30 லட்சம் செலவில் தடுப்புக்கம்பி, படிக்கட்டு, உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டன. கஜா புயலில் அனைத்தும் சேதமடைந்த நிலையில் மூன்றாண்டுகளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டது. மீண்டும் நிதி ஒதுக்கி இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

*மதுரை திருமலை நாயக்கர் மகாலில் வரலாறு காட்சிகளை விளக்கும் ஒலி ஒளி அமைப்பு பழைய முறைப்படியே உள்ளது. லேசர் ஒலி ஒளி காட்சியாக மாற்றி பார்வையாளர்களை கவர வேண்டும்.*வண்டியூர் கண்மாய் 600 ஏக்கர் பரப்பளவில் நகரின் நடுவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. தற்போது பாசனப்பரப்பு குறைந்ததால் இப்பகுதி மக்களின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்றும் வகையில் கண்மாயின் நான்கு பகுதிகளிலும் வாசலுடன் நடைபாதை அமைக்க வேண்டும். உள்ளே படகு மற்றும் நீர் விளையாட்டுகளை ஒருங்கிணைக்க வேண்டும். மதுரையின் வரலாற்று ஆவணங்கள் குறித்த லேசர் ஒலிஒளி காட்சி அமைக்க வேண்டும். *மதுரையில் முதன்முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட ஆடி அம்மன் கோயில் சுற்றுலா திட்டம் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதுபோன்ற உள்ளூர் சுற்றுலா திட்டங்களை கூடுதலாக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X