தாய் உடலை 'வீல் சேரில்' வைத்து மயானத்துக்கு தள்ளி சென்ற மகன்

Updated : செப் 09, 2022 | Added : செப் 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருச்சி-மணப்பாறை அருகே, தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தாயை, 'வீல் சேரில்' வைத்து மயானத்துக்கு கொண்டு சென்ற மகன் எரியூட்டினார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பாரதியார் நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் மனைவி ராஜேஸ்வரி, 74. தோல் நோயால் பாதிக்கப்பட்ட அவர், நான்காண்டுகளாக மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்தார்.உடல் நலக்குறைவால், நேற்று காலை, ராஜேஸ்வரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி-மணப்பாறை அருகே, தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தாயை, 'வீல் சேரில்' வைத்து மயானத்துக்கு கொண்டு சென்ற மகன் எரியூட்டினார்.



latest tamil news



திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பாரதியார் நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் மனைவி ராஜேஸ்வரி, 74. தோல் நோயால் பாதிக்கப்பட்ட அவர், நான்காண்டுகளாக மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்தார்.உடல் நலக்குறைவால், நேற்று காலை, ராஜேஸ்வரி இறந்தார். எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து, குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திய முருகானந்தம், தாய்க்கு இறுதிச் சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் வர மாட்டார்கள் என்று எண்ணியுள்ளார்.


latest tamil news



அதனால், தாயின் உடலை வீல் சேரில் வைத்து, துணியால் மூடினார். 3 கி.மீ.,யில் உள்ள இடுகாட்டுக்கு, வீல் சேரை தள்ளிச் சென்றார்.அங்கிருந்த மயான ஊழியர்களிடம் நோய்வாய்ப்பட்டு தாய் இறந்தது பற்றி தெரிவித்தார். அவர்கள், மயான பராமரிப்பாளர் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவித்தனர். மயானத்திற்கு வந்த ஸ்ரீதர், அரசு தரப்பில் பல உதவிகள் வழங்கப்படும் நிலையில், இறந்தவர் உடலை வீல் சேரில் வைத்து தள்ளி வந்த முருகானந்தத்தை கண்டித்தார்.தன் அறியாமையை முருகானந்தம் ஒப்புக் கொண்டார். அதன் பின், இறுதிச் சடங்குகளை செய்து, உடலை எரியூட்டினர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பழனி - Madurai,இந்தியா
09-செப்-202204:03:24 IST Report Abuse
பழனி உதவி கேட்டுட்டா மட்டும்..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X