மாநில அளவிலான டி-20 கிரிக்கெட்; பகடா அணி அபாரம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
கோவை : மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பகடா ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கொங்கு சமூக ஆன்மிக கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை சார்பில், முதலாம் ஆண்டு, 16 வயதுக்கு உட்பட்ட மாநில அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி, டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. 'லீக்' மற்றும் 'நாக்- அவுட்' முறையில் போட்டி நடத்தப்படுகிறது.போட்டியை,
மாநில அளவிலான டி-20 கிரிக்கெட்; பகடா அணி அபாரம்

கோவை : மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பகடா ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொங்கு சமூக ஆன்மிக கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை சார்பில், முதலாம் ஆண்டு, 16 வயதுக்கு உட்பட்ட மாநில அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி, டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. 'லீக்' மற்றும் 'நாக்- அவுட்' முறையில் போட்டி நடத்தப்படுகிறது.போட்டியை, குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார். டி.ஆர்.ஏ., பள்ளி தலைமையாசிரியர் பொன்னம்மாள், டி.கே.எஸ்., பள்ளி முதல்வர் சுஜாதா, மேலாளர் ராமானந்தம், போட்டி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி மற்றும் குமாரபாளையம் கே.எஸ்.ஆர்., அகாடமி அணிகள் மோதின. முதலில் விளையாடிய நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 20 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 155 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கே.எஸ்.ஆர்., அணி, 20 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 61 ரன் மட்டுமே எடுத்து, 94 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

* பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய புரொபஷனல் சி.ஏ., அணி, 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 69 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய டி.சி.வி.எம்.ஏ., அணியினர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 19.2 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 70 ரன் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

* மற்றொரு போட்டியில் ஷியாம் கிரிக்கெட் அகாடமி அணி மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஷியாம் சி.ஏ., அணியினர், 20 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பகடா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 9.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 73 ரன் எடுத்து, பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X