முகூர்த்த நாட்களில் 5 மடங்கு விலை உயர்வுமுதலீடு அதிகரிப்பால் வியாபாரிகள் நஷ்டம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ஓணம் பண்டிகையால் வெளியூர்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு பூக்களின்வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து முகூர்த்த நாட்களாலும் பூக்களின் விலை வழக்கத்தை விட 5 மடங்கு உயர்ந்ததால் விழாக்களுக்கு முன்பணம்பெற்ற வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி குறைவாக உள்ளது. பெரும்பாலான பூக்களை வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து
முகூர்த்த நாட்களில் 5 மடங்கு விலை உயர்வுமுதலீடு அதிகரிப்பால் வியாபாரிகள் நஷ்டம்



ராமநாதபுரம் : ஓணம் பண்டிகையால் வெளியூர்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு பூக்களின்வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து முகூர்த்த நாட்களாலும் பூக்களின் விலை வழக்கத்தை விட 5 மடங்கு உயர்ந்ததால் விழாக்களுக்கு முன்பணம்பெற்ற வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி குறைவாக உள்ளது. பெரும்பாலான பூக்களை வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து விற்கின்றனர்.

தற்போது மதுரை, திண்டுக்கல் பகுதியில் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு அனுப்பப்பட்டது.இதனால் வழக்கமான விலையை விட ஐந்து மடங்கு பூக்கள் விலை உயர்ந்தது. இதனால் முகூர்த்த நாட்களுக்கு மொத்தமாக விலை பேசி முன்பணம் பெற்ற வியாபாரிகளுக்கு அதிக முதலீட்டால் பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.தமிழ்நாடு பூக்கட்டும்வியாபாரிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகன் கூறுகையில், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டையில் இருந்து பூக்களைமொத்தமாக வாங்குகிறோம்.

வரத்து குறைவு, ஓணம் பண்டிகையால் கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு விற்ற மல்லிகை 3700 முதல் 4000 ரூபாய்க்கு விற்றது.கனகாம்பரம் ரூ.600ல் இருந்து ரூ.3500க்கும், ரோஜா ரூ.400, பிச்சி ரூ.2500 என 4 முதல் 5 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளது. ரூ.5000 முதலீடு தற்போது ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. திருமணத்திற்கு 10 ஆயிரம்ரூபாய்க்கு ஆர்டர் முன்பணம் பெற்றவர்கள் விலை உயர்வால் ரூ.20 ஆயிரம்வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. கடன் வாங்கி மொத்தமாக கொள்முதல் செய்தும், நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X