காவலர் குடியிருப்பு கட்டுமானப்  பணிகள்

Added : செப் 09, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டையில் ரூ.86 கோடியில் கட்டப்படும் காவலர்கள் குடியிருப்பு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ம் அணி முகாம் அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை தமிழக அரசு உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில் ரூ.34.04 கோடியில் காவலர்கள் தங்கும் இடம்,
காவலர் குடியிருப்பு  கட்டுமானப்  பணிகள்



ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டையில் ரூ.86 கோடியில் கட்டப்படும் காவலர்கள் குடியிருப்பு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ம் அணி முகாம் அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை தமிழக அரசு உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில் ரூ.34.04 கோடியில் காவலர்கள் தங்கும் இடம், நிர்வாக கட்டடம் கட்டும் பணி, ரூ. 55.67 கோடியில் புதிதாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ம் பட்டாலியன் 3 உதவி கமாண்டன்கள், 6 இன்ஸ்பெக்டர்கள்,30 எஸ்.ஐ.,க்கள், 300 ஏட்டுகள் மற்றும் போலீசாருக்கான குடியிருப்பு கட்டும் பணிகள் நடக்கிறது.

இப்பணிகளை, சென்னை உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி நேற்று பார்வையிட்டார். அப்போது காவலர் வீட்டு வசதிக் கழக நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன் பணிகள் குறித்த விபரங்களை கூறினார். கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உடனிருந்தார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் செப்.11ல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள், அக்.30ல் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பணீந்திர ரெட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மயில்வாகனன், எஸ்.பி.,தங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X