வண்டியூர் ஐயப்பன்,கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்| Dinamalar

வண்டியூர் ஐயப்பன்,கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

Added : செப் 09, 2022 | |
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம், வண்டியூர் ஐயப்பன், கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. செப்.6 காலை 8:00 மணி முதல் அனுக்ஞை, கோ பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. அன்று மாலை வாஸ்து சாந்தியும், இரவு 8:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்கியது. செப்.7ல் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள் துவங்கி, 10:00 மணிக்கு
வண்டியூர் ஐயப்பன்,கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்



பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம், வண்டியூர் ஐயப்பன், கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. செப்.6 காலை 8:00 மணி முதல் அனுக்ஞை, கோ பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. அன்று மாலை வாஸ்து சாந்தியும், இரவு 8:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்கியது. செப்.7ல் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள் துவங்கி, 10:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது.



பின்னர் தீர்த்த குடங்கள்புறப்பாடாகி, காலை 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமி, கருப்பண சுவாமி விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஐயப்பன், கன்னிமூல கணபதி, மாளிகை புரத்தம்மன், நாகராஜர், கருப்பணசாமி, துவாரக பாலகர்கள் மற்றும் தனி சன்னதியில் அருள்பாளிக்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.சிறப்பு தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X