மதுரை சிறையில் கைதிகளால் பெண் டாக்டருக்கு அச்சுறுத்தல்

Added : செப் 09, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை மத்திய சிறையில் சிகிச்சை அளித்து வரும் பெண் டாக்டருக்கு கைதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இச்சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் பெண் டாக்டர் ஒருவர் கைதிகளிடம் கனிவாக பேசுவதில்லை, ஒருமையில் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அவர் மீது கைதிகள் கோபத்தில் உள்ளதால் எந்நேரமும் டாக்டருக்கு ஆபத்து



மதுரை : மதுரை மத்திய சிறையில் சிகிச்சை அளித்து வரும் பெண் டாக்டருக்கு கைதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இச்சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் பெண் டாக்டர் ஒருவர் கைதிகளிடம் கனிவாக பேசுவதில்லை, ஒருமையில் பேசுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் அவர் மீது கைதிகள் கோபத்தில் உள்ளதால் எந்நேரமும் டாக்டருக்கு ஆபத்து ஏற்படலாம் என சிறை நிர்வாகம் அச்சத்தில் உள்ளது.சிறை காவலர்கள் கூறியதாவது: இங்குள்ள 4 டாக்டர்களும் ஒற்றுமையாக இருப்பதில்லை. கைதியை அரசு மருத்துவமனையில் சேர்க்கலாம் என ஒரு டாக்டர் பரிந்துரைத்தால், மற்றொருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒவ்வொரு விஷயத்திலும் இவர்கள் முரண்பட்டு நிற்கின்றனர். பெண் டாக்டர் தொடர்ந்து கைதிகளை அவமதித்து பேசி வருகிறார்.

சில கைதிகள் அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். டாக்டர் குறித்து சிறை கண்காணிப்பாளரிடமும் புகார் தெரிவித்தனர். இவருக்கு பதில் வேறு டாக்டரை நியமிக்க வேண்டும் என பலமுறை சிறை நிர்வாகம் மருத்துவக்கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியும் இதுவரை மாற்றவில்லை. இதனால் எந்நேரமும் கைதிகளால் பெண் டாக்டருக்கு ஆபத்து ஏற்படலாம், என்றனர்.


மனநல சிகிச்சை எடுத்து வரும் டாக்டரால் சர்ச்சை

சிறையில் சிகிச்சை அளித்துவரும் 4 டாக்டரில் ஒருவர் மனநல சிகிச்சைக்குரிய மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மனஅழுத்தத்திற்கு உள்ளாகி சிறையில் உள்ள கைதிகளுக்கு இவர் சிகிச்சை அளிக்கும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் பாலமுருகன் என்ற கைதியை டாக்டரே வீல்சேரில் தள்ளிக்கொண்டு மெயின் கேட்டிற்கு வந்து வெளியே அழைத்துச்செல்ல வேண்டும் என கேட்டிருக்கிறார்.

அவரை சமரசம் செய்து சிறை மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். அதே போல் பனியனுடன் அமர்ந்து கைதிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனருக்கு சிறை நிர்வாகம் தகவல் தெரிவிக்க, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சென்றதோடு சரி. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X