மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்ல அனுமதி தென் மாவட்ட ரயில்கள் தாமதமின்றி வரும்

Updated : செப் 09, 2022 | Added : செப் 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: செங்கல்பட்டு - தாம்பரம் மூன்றாவது புதிய பாதையில், மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், தென்மாவட்ட ரயில்கள் தாமதம் இன்றி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.விரைவு ரயில்கள் தாமதம் இன்றி செல்லவும், கூடுதல் ரயில்களை இயக்கும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது புதிய பாதை அமைக்கப்பட்டது. இந்த புதிய

சென்னை: செங்கல்பட்டு - தாம்பரம் மூன்றாவது புதிய பாதையில், மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், தென்மாவட்ட ரயில்கள் தாமதம் இன்றி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

விரைவு ரயில்கள் தாமதம் இன்றி செல்லவும், கூடுதல் ரயில்களை இயக்கும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது புதிய பாதை அமைக்கப்பட்டது. இந்த புதிய பாதை கடந்த மாதம் ரயில் இயக்கத்தின் பயன்பாடிற்கு துவங்கப்பட்டது. இருப்பினும், ரயில்களை இயக்க வேக கட்டுப்பாடுகள் இருந்தன.latest tamil news
இந்நிலையில், இந்த புதிய பாதையில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ , வேகத்தில் செல்ல, தெற்கு ரயில்வே கடந்த 7ம் தேதி அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது புதிய பாதையில், பல்வேறு கட்ட சோதனைக்கு இடையே, படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், தென்மாவட்ட ரயில்கள் தாமதம் இன்றி இயக்கப்படும். செங்கல்பட்டு - கடற்கரை தடத்தில் மின்சார ரயில்களும் தாமதம் இன்றி செல்ல முடியும். குறிப்பாக, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ரயில் நிலையங்களில் சிக்னலுக்காக நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அதுபோல, தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
09-செப்-202215:31:36 IST Report Abuse
chennai sivakumar இதில் பெரிய தலைவலி என்ன வென்றால் அதிகாலை நான்கு மணியளவில் வந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோ விற்க்கு ஏகப்பட்ட தண்டம் அழ வேண்டும். மேலும் இப்போது ஒலா உபேர் எல்லாம் கொள்ளை என்றால் பகர்கொள்ளை. மேடவாக்கம் திருமண மண்டபம் to Adyar 880 ரூபாய் காலை 10 மணி விலை நிலவரம். இரவு Adyar to சென்ட்ரல் 480. இந்த கொள்ளையை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 70 களில் மஞ்ச taxi அடிச்ச லூட்டி ஒரு வழியாக முடிந்தது என்றால் இப்போ புது பூதம் கிளம்பி உள்ளது. நடுவில் ஒரு மாதிரி reasonable price இருந்தது. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது. பாவம் நடுத்தர மக்கள்
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
09-செப்-202215:11:27 IST Report Abuse
mupaco Nellaiyil irunthu pagal nera vandi (vaigai ex pola) vum. Parani Express
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
09-செப்-202211:35:01 IST Report Abuse
JeevaKiran மேல்நாடுகளில் 300/500 கி மீ வேகத்தில் ரயில்கள் செல்கின்றன. நாம் இன்னும் நூறிலேயே இருக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X