ரேஷன் கார்டு கட்டணம்: இணையதள வசதி தாமதம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
சென்னை : புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் கார்டுகளை, தபாலில் பெறுவதற்கான கட்டணத்தை, இணையதளத்தில் செலுத்தும் வசதியை ஏற்படுத்த, உணவு துறை தாமதம் செய்துவருகிறது.ரேஷன் கார்டு தொலைத்தவர்கள், 'டூப்ளிகேட்' எனப்படும் நகல் கார்டை பெறலாம். இதற்குஇணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அலுவலகத்தில், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, நகல் கார்டு வாங்கலாம். பல அலுவலகங்களில் வழங்க, தாமதம்
சென்னை, ரேஷன் கார்டு, உணவுத் துறை, Chennai, Ration Card, Food Department,



சென்னை : புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் கார்டுகளை, தபாலில் பெறுவதற்கான கட்டணத்தை, இணையதளத்தில் செலுத்தும் வசதியை ஏற்படுத்த, உணவு துறை தாமதம் செய்துவருகிறது.

ரேஷன் கார்டு தொலைத்தவர்கள், 'டூப்ளிகேட்' எனப்படும் நகல் கார்டை பெறலாம். இதற்குஇணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அலுவலகத்தில், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, நகல் கார்டு வாங்கலாம். பல அலுவலகங்களில் வழங்க, தாமதம் செய்யப்படுகிறது.
இதையடுத்து, புதிய கார்டு மற்றும் நகல் கார்டுகளை, பயனாளிகள் வீடுகளுக்கே தபாலில் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது நகல் கார்டுக்கு, 20 ரூபாய் மற்றும் அஞ்சல் கட்டணம், 25 ரூபாய் என, மொத்தம் 45 ரூபாயையும் இணையதளத்தில் செலுத்த வேண்டும். இதுவரை, இணைய தளத்தில் கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்படவில்லை.
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிஒருவர் கூறுகையில், 'மென்பொருள் தயாரிப்பு பணி நடக்கிறது. இந்த பணி முடியும்தருவாயில் இருப்பதால், விரைவில் இணையதளத்தில் கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்படும்' என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X