சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : ராஜேந்திரபட்டிணம் சர்வ சித்தி விநாயகர் கோவில் கும்பாபி ேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று முன்தினம் மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது.இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 5ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை
சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்



விருத்தாசலம் : ராஜேந்திரபட்டிணம் சர்வ சித்தி விநாயகர் கோவில் கும்பாபி ேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று முன்தினம் மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது.இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 5ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, நடந்தது. மறுநாள் 6ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை கோ பூஜை, சூரிய பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு, ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமி தலைமையில், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடைபெற்றது. கும்பாபிேஷகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X