கொரோனா பாதிப்பு குறைந்தது மாநகர நல அலுவலர் தகவல்| Dinamalar

கொரோனா பாதிப்பு குறைந்தது மாநகர நல அலுவலர் தகவல்

Added : செப் 09, 2022 | |
''மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றுடன் சிலர் கண்டறியப்பட்டாலும், எண்ணிக்கை குறைந்து வருகிறது,'' என்று, மாநகர நல அலுவலர் பிரகாஷ் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:மாவட்டத்தில் தினமும், 25 முதல், 30 பேர் வரை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலர் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள். தற்போது கொரோனா பரிசோதனையில், நான்கு மணி நேரத்தில்

''மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றுடன் சிலர் கண்டறியப்பட்டாலும், எண்ணிக்கை குறைந்து வருகிறது,'' என்று, மாநகர நல அலுவலர் பிரகாஷ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் தினமும், 25 முதல், 30 பேர் வரை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலர் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள். தற்போது கொரோனா பரிசோதனையில், நான்கு மணி நேரத்தில் முடிவு கிடைக்கிறது. இதனால் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு, சிகிச்சையை தொடர்கின்றனர். முன்பிருந்தது போல தற்போது தீவிர பரவல் இல்லை. தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை. டெங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசு உற்பத்தி, குளிர் காலத்தில் ஏற்படும். வடகிழக்கு பருவ மழையின்போது ஜூரம் தென்படும். மாநகரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த, அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனம் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X