சரபங்காவில் வெள்ளப்பெருக்கு; 50 வீடுகளில் புகுந்த தண்ணீர்

Added : செப் 09, 2022 | |
Advertisement
சரபங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கால் இடைப்பாடியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 3 நாளாக ஏற்காட்டில் பெய்த கன மழையால் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இடைப்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள வெள்ளாளபுரம், சின்னப்பம்பட்டி, தாதாபுரம், இடைப்பாடி பகுதிகளில் உள்ள சரபங்காவில், நேற்று


சரபங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கால் இடைப்பாடியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 3 நாளாக ஏற்காட்டில் பெய்த கன மழையால் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இடைப்பாடி தாலுகா பகுதிகளில் உள்ள வெள்ளாளபுரம், சின்னப்பம்பட்டி, தாதாபுரம், இடைப்பாடி பகுதிகளில் உள்ள சரபங்காவில், நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நைனாம்பட்டியில், ஆற்றங்கரையோரம் உள்ள, 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அதை ஒட்டியுள்ள இடைப்பாடி அரசு மருத்துவமனை பிணவறை பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது. 30 ஆண்டுக்கு பின் சரபங்கா ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் இடைப்பாடி பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள சரபங்கா பாலத்தில் ஆகாயத்தாமரை, புற்கள் அடைத்ததால், அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. மேலும் வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்த மக்களை மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இருப்பினும், இடைப்பாடி நகராட்சி தலைவர் பாஷா, கமிஷனர் சசிகலா உள்ளிட்டோர் ஆய்வு செய்து, பொக்லைன், கிரேன் மூலம், சரபங்காவில் இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆலமரம் சாய்ந்தது
பூலாம்பட்டி, வளையசெட்டியூரில், 500 ஆண்டு பழமையான ஆலமரம், நேற்று முன்தினம் மாலை வேரோடு சாய்ந்தது. அதன் அருகே தொடக்கப்பள்ளியில் உள்ள குழந்தைகள், வகுப்பு முடிந்து வீட்டுக்கு சென்றதால், அசம்பாவிதம் ஏற்படவில்லை.
மேலும் பூலாம்பட்டி - மேட்டூர் சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை, அந்த மரம் அகற்றப்பட்டதால், போக்குவரத்து தொடங்கியது.
நோயாளிகள் அவதி
ஓமலுார், பாகல்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஏரிக்கரை ஓரத்தில் உள்ளது. மழையால், அருகே உள்ள ஏரி நிரம்பியது. அதில் இருந்து வெளியேறிய உபரி நீர், சுகாதார நிலைய வளாகத்தில் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், சுகாதார நிலையம் முன், குளம் போல் தண்ணீர் தேங்கியது. நேற்று, மருத்துவர்கள், நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
போலீசார் சமரசம்
தாரமங்கலம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர், சார்பதிவாளர் அலுவலகம் வழியே சாலையில் ஓடியதால், ஓமலுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், முறையாக கால்வாய் அமைத்து நீரை வெளியேற்றக்கோரி, அப்பகுதி மக்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், மறியலை மக்கள் கைவிட்டனர்.
தத்தளித்தவர்கள் மீட்பு
சேலத்தில் பெய்து வரும் மழையால் ஏற்காட்டில் இருந்து பள்ளப்பட்டி ஏரிக்கு வரும் வெள்ள நீர் ஓடை ஆக்கிரமிப்பு, வழியில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால், வீடுகளுக்குள் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு, லீபஜார், அகிலாண்டேஸ்வரி ஓடையில் உள்ள, ஆறு வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். செவ்வாய்ப்பேட்டை தீ அணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன், சூரமங்கலம் சிராஜ் அல் வனீஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், வெள்ள நீரில் சிக்கிய, 21 பேரை கயிறு கட்டி, படகு மூலம் மீட்டு வந்து, சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க
வைத்தனர்.
சாலை மறியல்
சேலம் மாநகராட்சி, 16வது வார்டு கோவிந்த கவுண்டர் தோட்டம், 26வது வார்டு சாமிநாதபுரம், தோப்புக்காடு, ஆர்.டி.பால் தெரு, ரத்தினம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள், டி.வி.எஸ்., பஸ் ஸ்டாப் அருகே ஓமலுார் பிரதான சாலையில் மறியலில்
ஈடுபட்டனர். மேயர் ராமச்சந்திரன், சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜ் பேச்சு நடத்தி சமாதானப்படுத்த, மக்கள் மறியலை கைவிட்டனர்.
மேயர் ஆய்வு
ஏற்காடு பகுதிகளில் பெய்த மழையால், அதன் அடிவார பகுதியிலிருந்து, சேலம் பள்ளப்பட்டி வரை செல்லும் வரட்டாற்று ஓடை, ரராஜவாய்க்கால், திருமணிமுத்தாறு உள்ளிட்டவற்றில் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. அதில் அடித்துவரப்பட்ட மரக்கட்டை, குப்பை தேங்கி, பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓடை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிறிஸ்துராஜ், ஓடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். தொடர்ந்து அனைத்து ஓடைகளிலும் துார்வாரி, சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சூரமங்கலம் மண்டலத்தில் ராஜாகண்ணு, சாமிநாதபுரம் ஓடைகள்; அஸ்தம்பட்டி மண்டலத்தில் வரட்டாறு ஓடையில் மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு
செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X