அழித்து விற்பனை செய்த மரங்கள் இருப்பதாக 'கணக்கு': சேலம் வனத்துறையினரிடம் விஜிலன்ஸ் 'கிடுக்கிப்பிடி'

Added : செப் 09, 2022 | |
Advertisement
வனத்துறையில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை அழித்து விற்றுவிட்ட நிலையில், இருப்பதாக அரசுக்கு, 'கணக்கு' காட்டியதாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்ட வனத்துறையினரிடம், சென்னை, விஜிலன்ஸ் அதிகாரிகள், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினர்.சேலம், ஆத்துார் கோட்ட வனத்துறை திட்டப்பணிகளில் முறைகேடு நடப்பதாக, சென்னை வனத்துறை விஜிலன்ஸ் பிரிவுக்கு புகார் சென்றது. சென்னை

வனத்துறையில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை அழித்து விற்றுவிட்ட நிலையில், இருப்பதாக அரசுக்கு, 'கணக்கு' காட்டியதாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்ட வனத்துறையினரிடம், சென்னை, விஜிலன்ஸ் அதிகாரிகள், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினர்.
சேலம், ஆத்துார் கோட்ட வனத்துறை திட்டப்பணிகளில் முறைகேடு நடப்பதாக, சென்னை வனத்துறை விஜிலன்ஸ் பிரிவுக்கு புகார் சென்றது. சென்னை விஜிலன்ஸ் பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர், சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் கோட்ட வன அலுவலகம், குரும்பப்பட்டி உயிரில் பூங்கா, ஆத்துார் கோட்டத்தில் கருமந்துறை ஆகிய இடங்களில் நேற்று வனத்துறையினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, திட்டப்பணி தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தனர். கருமந்துறையில் வனப்பகுதியிலும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட வனத்துறையினர் கூறியதாவது: ஆத்துார் வன கோட்டம், கல்வராயன் மலையில் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டன. அந்த மரங்களை அழித்து விற்கப்பட்டன. ஆனால், மரங்கள் இருப்பதாக அரசுக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனிடையே வனத்தில், குறிப்பிட்ட ஆண்டுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கலாம் என்ற திட்டத்தில் சிலரிடம் பணம் பெற்று முறைகேடாக நிலம் வழங்கப்பட்டுள்ளது.
பல கோடி கொள்ளை
வனத்துறை உயர் அதிகாரியின் உறவினர், மாவட்டத்தில் வனச்சரக அலுவலராக உள்ளார். அவர், சில ஆண்டுக்கு முன் கனிம வளத்தை சட்ட விரோதமாக தோண்டி பல கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார். இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்தது. இந்த வழக்கில் இருந்து தப்ப, சாட்சிகளை மிரட்டி பேரம் பேசி வருகிறார். மேலும் செல்வாக்கை
பயன்படுத்தி நீண்ட நாளாக சேலம் மாவட்டத்தில் பணிபுரிகிறார்.
இதுதவிர, பழங்குடி மக்களுக்கு குடிநீர் தொட்டி, மின்விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முடிக்காமலே முடிந்து விட்டதாக, வன அதிகாரிகள் தரப்பில் கணக்கு காட்டப்பட்டு சில இடங்களில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. ஆத்துார் வனப்பகுதியில் மரங்களை அழித்து, அதிகமான மண் சாலை, தார்ச்சாலை போடப்பட்டுள்ளன.
பண மோசடி
மேலும், உயர் அதிகாரியின் மற்றொரு உறவினர் பெயரில், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வளர்ச்சி திட்டப்பணிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு பணிகளை முடிக்காமல், லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்த மற்றொரு உறவினர், வன நிலத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். மேலும் அந்த உயரதிகாரியே, 5 ஆண்டுக்கு மேல் ஒரே மாவட்டத்தில் பணிபுரிகிறார். இதுபோன்ற புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்தது. இதற்காக ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. விசாரணை முடிவில் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X