கவர்னருடன் கெஜ்ரிவால் சந்திப்பு| Dinamalar

கவர்னருடன் கெஜ்ரிவால் சந்திப்பு

Added : செப் 09, 2022 | கருத்துகள் (2) | |
புதுடில்லி: டில்லி கவர்னர் சக்சேனாவுடன் முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பானது, சுமூகமான சூழ்நிலையில் சந்தித்ததாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.மதுபான கொள்கை தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் நடந்த ரெய்டிற்கு பிறகு இருவரும் சந்தித்து கொள்வது இது முதல்முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஆக.,12 ல் இருவரும் சந்தித்து
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லி கவர்னர் சக்சேனாவுடன் முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பானது, சுமூகமான சூழ்நிலையில் சந்தித்ததாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மதுபான கொள்கை தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் நடந்த ரெய்டிற்கு பிறகு இருவரும் சந்தித்து கொள்வது இது முதல்முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஆக.,12 ல் இருவரும் சந்தித்து கொண்டனர். அடுத்த வாரம் 19 ம் தேதியன்று சந்திப்பு நிகழவிருந்தது. ஆனால், அன்றைய தினம் தான் ரெய்டு நடந்ததால் சந்திப்பு நடக்கவில்லை.

பின்னர், கவர்னர் மீது ஆம் ஆத்மி கட்சியினர் ஊழல் புகார் கூறியிருந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த கவர்னர், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால், கவர்னர் - மாநில அரசு இடையே மோதல் வலுத்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X