மாணவியை கடத்தி திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு| Dinamalar

மாணவியை கடத்தி திருமணம் மூவர் மீது 'போக்சோ' வழக்கு

Added : செப் 09, 2022 | |
செய்யாறு:செய்யாறு அருகே, பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த இருவர் மீது, 'போக்சோ'வில் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் டிரைவர் சந்தோஷ், 26; கடந்த சில மாதங்களுக்கு முன், வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார்.அப்போது அங்கு, தன் தாயுடன்

செய்யாறு:செய்யாறு அருகே, பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த இருவர் மீது, 'போக்சோ'வில் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் டிரைவர் சந்தோஷ், 26; கடந்த சில மாதங்களுக்கு முன், வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார்.அப்போது அங்கு, தன் தாயுடன் வந்த திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை சேர்ந்த, பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, மொபைல்போனில் அடிக்கடி பேசி வந்தனர்.


கடந்த, 29ல் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்ற சந்தோஷ், பெரணம்பாக்கம் கிராமத்திலுள்ள தன் சகோதரி நந்தினி வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்றார்.அங்கு சந்தோஷ், நந்தினி, அவர் கணவர் முருகதாஸ் ஆகியோர் உதவியுடன், மாணவியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், மாணவியின் பெற்றோர் புகார்படி, ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.


இதையறிந்த சந்தோஷ், மாணவியை ஆரணி பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றார். மாணவி அளித்த புகார்படி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து, தலைமறைவான சந்தோஷ், நந்தினி, முருகதாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X