புதுச்சேரியில் 2,899 பேர்'நீட்' தேர்வில் தேர்ச்சி

Added : செப் 09, 2022 | |
Advertisement
புதுச்சேரி:இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வில், புதுச்சேரி மாநிலத்தில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுதும், இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு கடந்த ஜூலை 17ல் நடைபெற்றது.தேசிய தேர்வு முகமை நடத்திய இத்தேர்வை, 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ - மாணவியர் எழுதினர். 'நீட்' தேர்வு முடிவு வெளியானது.இதில், புதுச்சேரி

புதுச்சேரி:இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வில், புதுச்சேரி மாநிலத்தில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுதும், இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு கடந்த ஜூலை 17ல் நடைபெற்றது.தேசிய தேர்வு முகமை நடத்திய இத்தேர்வை, 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ - மாணவியர் எழுதினர். 'நீட்' தேர்வு முடிவு வெளியானது.இதில், புதுச்சேரி மாணவர் குருதேவநாதன் 675 மதிப்பெண் எடுத்து, தேசிய அளவில் 1,249ம் இடமும், புதுச்சேரி மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.

புதுச்சேரியில் இருந்து 5,749 பேர் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 5,511 பேர் தேர்வு எழுதியதில், 2,899 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது, 52.60 சதவீத தேர்ச்சி ஆகும்.கடந்தாண்டு புதுச்சேரியில் இருந்து 4,925 பேர் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து, 4,474 பேர் எழுதினர். இதில் 2,362 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 52.79 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்தாண்டை ஒப்பிடும்போது, இந்தாண்டு தேர்ச்சி 0.19 சதவீதம் குறைந்துள்ளது. 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துஉள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் இருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 5,511 மாணவர்களில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 675 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 1,249வது இடத்தையும் பெற்ற குருதேவநாதனுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற இயலாத மாணவர்களும் மனம் சோர்வு அடையாமல், முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என கூறி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X