இணைப்பு கால்வாயில் எச்சரிக்கை அறிவிப்பு

Added : செப் 09, 2022 | |
Advertisement
இருளஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்து உள்ளது நரசிங்கபுரம். இப்பகுதியில் உள்ள கூவம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், இருளஞ்சேரி, குமாரசேரி, கொண்டஞ்சேரி வழியாக, சத்தரை கிராமத்தில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் நீர் வரத்துக் கால்வாய் உள்ளது.இந்த நீர் வரத்து இணைப்புக் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. மேலும், தண்டலம்
இணைப்பு கால்வாயில் எச்சரிக்கை அறிவிப்பு

இருளஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்து உள்ளது நரசிங்கபுரம். இப்பகுதியில் உள்ள கூவம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், இருளஞ்சேரி, குமாரசேரி, கொண்டஞ்சேரி வழியாக, சத்தரை கிராமத்தில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் நீர் வரத்துக் கால்வாய் உள்ளது.

இந்த நீர் வரத்து இணைப்புக் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது.
மேலும், தண்டலம் -அரக்கோணம் நெடுஞ்சாலையில், இருளஞ்சேரி பகுதியில் இந்த இணைப்பு கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு, நெல் விவசாயம் பயிரிடப்பட்டு வருகிறது.

இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சர்வே எண் 329ஏ/1ல் உள்ள இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது; மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X