பொங்கல் பயண முன்பதிவு12ல் ரயில்வே துவக்கம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
சென்னை:பொங்கலுக்கு ஊருக்கு செல்ல விரும்புவோர், வரும் 12ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகையின் போது, சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்று வருவர். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ல் போகி பண்டிகை துவங்கி, 17ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால்,

சென்னை:பொங்கலுக்கு ஊருக்கு செல்ல விரும்புவோர், வரும் 12ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகையின் போது, சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்று வருவர். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14ல் போகி பண்டிகை துவங்கி, 17ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்வர்.
எனவே, பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர், வரும் 12ம் தேதி முதல் தங்களது பயணத்திற்கு ஏற்ப, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வேயில், 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால், வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணியர், முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக, தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். ஏற்கனவே, தீபாவளிக்கு அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளன.காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களை தேர்வு செய்து, சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு செல்வோர், அடுத்த வாரம் முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.அதாவது, ஜனவரி 10ம் தேதி பயணிக்க விரும்புவோர், வரும் 12ம் தேதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X