சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'பெண்டிங்'கில் 600 பைல்: பெண் அதிகாரி 'சஸ்பெண்ட்'

Added : செப் 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
'பெண்டிங்'கில் 600 பைல்: பெண் அதிகாரி 'சஸ்பெண்ட்'''வாய்விட்டு புலம்பியும், காரியம் நடக்கலைன்னு வருத்தப் படுறாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தார் அன்வர்பாய்.''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''போன வாரம், தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்துச்சே... கூட்டம் முடிஞ்சு, அதிகாரிகளை அனுப்பிட்டு, அமைச்சர் களுடன் முதல்வர் அரசியல் நிலவரம்
'பெண்டிங்'கில் 600 பைல்: பெண் அதிகாரி 'சஸ்பெண்ட்'


'பெண்டிங்'கில் 600 பைல்: பெண் அதிகாரி 'சஸ்பெண்ட்'


''வாய்விட்டு புலம்பியும், காரியம் நடக்கலைன்னு வருத்தப் படுறாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தார் அன்வர்பாய்.

''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''போன வாரம், தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்துச்சே... கூட்டம் முடிஞ்சு, அதிகாரிகளை அனுப்பிட்டு, அமைச்சர் களுடன் முதல்வர் அரசியல் நிலவரம் பத்தி பேசியிருக்காரு பா...

''சீனியர் அமைச்சர்கள் சிலர், 'நாங்க சொல்றதை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் கேட்க மாட்டேங்கிறாங்க... அவங்க நினைக்கிறதை தான் செய்றாங்க... அதனால, நம்ம பேச்சை கேட்காத அதிகாரிகளை
மாத்தணும்'னு சொல்லியிருக்காங்க பா...

''இதை, முதல்வர் காது கொடுத்து கேட்டுக்கிட்டாலும், இதுவரை அதிகாரிகள் யாரையும் மாத்தலை... இதனால, அமைச்சர்கள் நொந்து போயிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''அமைச்சர்கள் பேச்சை கேட்காத அதிகாரி கள்னா, நேர்மையானவளா தான் இருப்பா...'' என சிரித்த குப்பண்ணா, ''போராட்டத்துக்கு தயாராகறா ஓய்...'' என்றார்.

''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மின் கட்டணத்தை உயர்த்த போறால்லியோ... ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கறதால, ரெண்டு கம்யூ.,க்கள், ம.தி.மு.க., - வி.சி.,க்கள் எல்லாம், 'கம்'னு இருக்கா ஓய்...

''பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உட்கட்சி பஞ்சாயத்துல சிக்கி தவிக்கறது... பா.ம.க., தரப்பு, அறிக்கையோட எதிர்ப்பை முடிச்சுண்டுடுத்து ஓய்...''இந்த பிரச்னையில, 'ஸ்கோர்' பண்ண த.மா.கா., தலைவர் வாசன் நினைக்கறார்... சென்னையில, மாநில அளவுல போராட்டம் நடத்தலாமா அல்லது மாவட்ட அளவுல
நடத்தலாமான்னு, கட்சியினரிடம் 'ஐடியா' கேட்டிருக்கார் ஓய்...

''அப்ப, மாவட்ட அளவுல நடத்திக்கலாம்னு நிர்வாகிகள் சொல்லிட்டா... சீக்கிரமே மாவட்ட அளவுல, மாபெரும் போராட்டங்களை நடத்த போறாளாம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பைல்களை 'பெண்டிங்'குல வச்சதால, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை சிட்டிக்குள்ள வர்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு, தங்களது பகுதிகள்ல, 10 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டடங் களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை குடுத்திருக்காங்க... மாநகராட்சிகள், நகராட்சி நிர்வாகங்கள், இந்த அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்துறாங்க...

''ஒன்றியங்கள், பேரூராட்சிகளுக்கு வரும் கட்டட அனுமதி பைல்களை சரிபார்க்க, சி.எம்.டி.ஏ.,வுல இருந்து திட்ட உதவியாளர்களை அனுப்பு வாங்க... இவங்க முறையா செயல்படாததால, கட்டுமான அனுமதி வாங்குறதுல சிக்கல் ஏற்படுதுங்க...

''சென்னை புறநகர்ல குன்றத்துார், காட்டாங்குளத்துார், திருவள்ளூர் ஒன்றியங்கள்ல கட்டட அனுமதி பைல்களை சரிபார்க்க, இரண்டாம் நிலை திட்ட பெண் உதவியாளர் ஒருத்தரை அனுப்புனாங்க... இவங்க, நிறைய பைல்களை கிடப்புல போட்டதா புகார்கள் வந்துச்சுங்க...

''விசாரிச்சப்ப, மூணு ஒன்றியங்கள்லயும், 600 பைல்களை பெண்டிங்குல போட்டது தெரிஞ்சது... அவங்களை இப்ப, 'சஸ்பெண்ட்' பண்ணியிருக்காங்க... 'இந்த மாதிரி நடவடிக்கை தொடர்ந்தா, பைல்கள் தேங்காது'ன்னு சி.எம்.டி.ஏ., வட்டாரங்கள்ல சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு முடிய பெரியவர்கள் கிளம்பினர். எதிர்ப்பட்ட சிறுமியிடம், ''மல்லிகா, தோப்பனார் ஆத்துல இருக்காரோ...'' என, குப்பண்ணா கேட்க, அவள் தலையை அசைத்தபடி சென்றாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10-செப்-202212:03:25 IST Report Abuse
NicoleThomson அந்த ஒரு பெண்மணி எவ்ளோ பைல் பார்க்கமுடியும் ? அவர் ஒருவரால் தேங்கியதா இல்லை\
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-செப்-202210:40:15 IST Report Abuse
duruvasar இந்த மாதிரி கோப்புகளை தேங்க வய்த்த விண்ணப்பித்தார்கள் மீது என்ன வகை அபராதம் விதிப்பார்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X