பிச்சை எடுப்பது போல் நாடகம்போரூரில் திருட்டு குடும்பம் சிக்கியது

Added : செப் 09, 2022 | |
Advertisement
போரூர், போரூர் சிக்னலில், காலில் கட்டுகளுடன் பிச்சை எடுப்பது போல் உலா வந்து, திருட்டில் ஈடுபட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, போரூர் சிக்னலில் ஒருவர் காலில் கட்டுகளுடன் பரிதாபமான நிலையில், அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட விபத்து அபாயம் குறித்து, சமூக வலைதளங்களில் வீடியோ
பிச்சை எடுப்பது போல் நாடகம்போரூரில் திருட்டு குடும்பம் சிக்கியது


போரூர், போரூர் சிக்னலில், காலில் கட்டுகளுடன் பிச்சை எடுப்பது போல் உலா வந்து, திருட்டில் ஈடுபட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, போரூர் சிக்னலில் ஒருவர் காலில் கட்டுகளுடன் பரிதாபமான நிலையில், அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட விபத்து அபாயம் குறித்து, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.இதையடுத்து, அப்பகுதியில் பிச்சை எடுப்போரை அப்புறப்படுத்துமாறு, காவல் துறை உயர் அதிகாரிகள், போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போரூர் போலீசார், குறிப்பிட்ட நபரிடம் விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் எழுந்தது.இதையடுத்து, போலீசார் அந்த நபரின் காலில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்தனர். ஆனால், காலில் காயங்கள் ஏதும் இல்லை. மக்களை ஏமாற்ற, அவர் போலி கட்டுப்போட்டு வலம் வந்தது தெரிந்தது.தொடர் விசாரணையில், அங்கு பிச்சை எடுத்து வாழும் வயதான மூதாட்டி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாயை, இந்த நபர் திருடியது தெரிந்தது.மேலும், இவரது தந்தை அதே பகுதியில் சாமியார் வேடத்தில் மக்களை ஏமாற்றி பிழைப்பதும், அவரது அக்கா அதே பகுதியில் பிச்சை எடுத்து வருவதும் தெரிய வந்தது.நாக்பூரை பூர்வீகமாக கொண்ட இவர்கள் மட்டுமின்றி, ஏராளமானோர் சென்னை வந்து, அம்பத்துார், பாடி உள்ளிட்ட பகுதிகளில் தங்கி, பல்வேறு இடங்களில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுவதையும், பார்வை மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் பணத்தை பறித்து செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதையடுத்து, போரூர் போலீசார், அந்த நபர் மற்றும் அவரது தந்தை, அக்கா ஆகியோரை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X