'டிஜிட்டல் காயின்' நிறுவனம் நடத்திஆசை வார்த்தை கூறி மோசடி என புகார்

Added : செப் 09, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி:'டிஜிட்டல் காயின்' நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் தலைமையில், 60க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.அதில்

கிருஷ்ணகிரி:'டிஜிட்டல் காயின்' நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் தலைமையில், 60க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:
ஓசூர், ராமகிருஷ்ணா நகர் அருண்குமார், கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி நந்தகுமார், பர்கூர் அடுத்த பெருகோபனப்பள்ளி சங்கர், பிரகாஷ், செட்டிப்பள்ளி சீனிவாசன், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி வேலன் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டனர்.
'யுனிவர் காயின்' என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினர். டிஜிட்டல் காயின் வாங்கினால் குறைந்த நாளில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர்.அதை நம்பி, அவர்களின் நிறுவனத்தில், 7.70 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்தேன். அதில், சிறிதளவில் வருமானம் வந்தது.
இதையறிந்து, எனக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள், 60 பேர் அந்த நிறுவனத்தில் டிபாசிட் செய்தனர்.முதலில் பணம் கொடுத்தவர்கள் பின் நிறுத்தி விட்டனர். அவர்களால் பாதிக்கப்பட்ட, 210 பேர் சார்பாக நான் புகார் மனு அளித்துள்ளேன்.இதுகுறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, இதுகுறித்து 'சைபர் கிரைம்' போலீஸ் மூலம் விசாரித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X