மீடியனில் கார் மோதி ஐந்து பேர் காயம்

Added : செப் 09, 2022 | |
Advertisement
ஈஞ்சம்பாக்கம், :சென்னை, ராயப்பேட்டை, வி.எம்., தெருவை சேர்ந்தவர் கோகுல் அஸ்வின், 20. மறைமலை நகரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ராயப்பேட்டையை சேர்ந்த ரஹீம் அஹமது, 19, ஹரீஷ், 21, கோபாலபுரத்தை சேர்ந்த பிரசாத், 21, சேப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது பர்வீஸ், 19, ஆகியோருடன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பொழுதுபோக்கு

ஈஞ்சம்பாக்கம், :சென்னை, ராயப்பேட்டை, வி.எம்., தெருவை சேர்ந்தவர் கோகுல் அஸ்வின், 20. மறைமலை நகரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ராயப்பேட்டையை சேர்ந்த ரஹீம் அஹமது, 19, ஹரீஷ், 21, கோபாலபுரத்தை சேர்ந்த பிரசாத், 21, சேப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது பர்வீஸ், 19, ஆகியோருடன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்திற்கு 'ஸ்விப்ட் டிசைர்' காரில் சென்றனர்.

பின், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, சாலையில் நாய் குறுக்கிட்டது. அதன் மீது, மோதாமல் இருக்க முயன்ற போது, கார் நிலை தடுமாறி மீடியன் மீது மோதி, தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஐவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X