குடிசைவாழ் குழந்தைகளுக்கு17ல் கால்பந்து போட்டி துவக்கம்| Dinamalar

குடிசைவாழ் குழந்தைகளுக்கு17ல் கால்பந்து போட்டி துவக்கம்

Added : செப் 09, 2022 | |
சென்னை:சென்னையில் உள்ள குடிசைவாழ் குழந்தைகளுக்கான கால்பந்து போட்டிகள், வரும் 17ல், நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.சென்னையின் பல்வேறு பகுதிகளில், குடிசை வாழ் குழந்தைகள் விளையாட்டு கல்வி திறன் மேம்பாட்டு மையம் செயல்படுகின்றன. இதன் சார்பில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கி வருகின்றனர்.அந்த வகையில்,

சென்னை:சென்னையில் உள்ள குடிசைவாழ் குழந்தைகளுக்கான கால்பந்து போட்டிகள், வரும் 17ல், நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.சென்னையின் பல்வேறு பகுதிகளில், குடிசை வாழ் குழந்தைகள் விளையாட்டு கல்வி திறன் மேம்பாட்டு மையம் செயல்படுகின்றன. இதன் சார்பில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கி வருகின்றனர்.



அந்த வகையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், குழந்தைகள் உரிமைகள் அமைப்பான 'கிரை' மற்றும் வியாசர்பாடி குடிசைவாழ் குழந்தைகள் மையம் இணைந்து நடத்தும், கால்பந்து போட்டிகள் வரும் 17ம் தேதி துவங்குகிறது. நேரு விளையாட்டு அரங்கில் உள்ள, எஸ்.டி.ஏ.டி., 'பி' மைதானத்தில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதில், கண்ணகி நகர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, கன்னிகாபுரம், எம்.கே.பி., நகர், வியாசர்பாடி ஏரிக்கரை, ராயபுரம், காசிமேடு, ஆர்.கே., நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடிசைவாழ் குழந்தைகள் அணிகள் பங்கேற்கின்றன.ஆண்களில் 13 அணிகளும், பெண்களில் மூன்று அணிகளும் மோதுகின்றன. சிறுவர்களில் நான்கு குழுக்களாகவும், சிறுமியரில் ஒரு குழுவாகவும் போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள் முதலில் 'லீக்' முறையிலும், அரையிறுதியில் இருந்து 'நாக் - அவுட்' முறையிலும் நடக்க உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X