'மக்களை திசை திருப்புவதே தி.மு.க., மந்திரிகளின் ஒரே பணி'

Added : செப் 09, 2022 | |
Advertisement
சென்னை:'மக்களை திசை திருப்புவது, உதாசீனப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது தான் தி.மு.க., அமைச்சர்கள் செய்யும் ஒரே பணி' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த ஆண்டு, 99 ஆயிரத்து 610 மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய நிலையில், இந்தாண்டு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது. மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள்

சென்னை:'மக்களை திசை திருப்புவது, உதாசீனப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது தான் தி.மு.க., அமைச்சர்கள் செய்யும் ஒரே பணி' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கடந்த ஆண்டு, 99 ஆயிரத்து 610 மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய நிலையில், இந்தாண்டு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது. மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் சுலபமாக எதிர்கொள்ள துவங்கி விட்டதற்கு, இதுவே சான்று. தேர்வு எழுதிய மாணவர்களில், 67 ஆயிரத்து, 877 பேர் வெற்றி பெற்றனர்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு, 10 ஆயிரத்து 572 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் தேர்வை எதிர்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை, 19 ஆயிரத்து 868ல் இருந்து, 31 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.
கிராமப்புற ஏழை மாணவர்கள் வேறு வழியில்லாமல், நீட் தேர்வு எழுதி வருகின்றனர் என்பது போன்ற உண்மைக்கு புறம்பான தகவலை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கூறுவது, மாணவர்களை சிறுமைப்படுத்துவது போன்றது. மக்களை திசை திருப்புவது, உதாசீனப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது தான் தி.மு.க., அமைச்சர்கள், ஆட்சிக்கு வந்த நாள் முதல் மறவாமல் செய்யும் ஒரே பணி.
மருத்துவ சேர்க்கைக்கு நுழைவு தேர்வு இல்லாத 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக, 31 அரசு பள்ளி மாணவர்கள் மட்டும், மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இவர்களில் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதை தெரிந்து கொண்டே அமைச்சர் பேசுவது, மலிவான அரசியல்.
இந்தாண்டு தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம், தி.மு.க.,வின் சுயலாப சிந்தனைகளும், இயலாமையின் மறு உருவமாக திகழும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமே ஆவர். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 'இ - பாக்ஸ்' எனப்படும் பயிற்சி முறையை, தி.மு.க., ஏன் கைவிட்டது என்பதை, மக்களுக்கு விளக்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவது, தி.மு.க., அமைச்சர்களின் கண்களை உறுத்துகிறது. ஊழலில் கொழிக்க நீட் தேர்வை, தி.மு.க., எதிர்த்து வருகிறது. தொடர்ச்சியாக மாணவர்களை பலவீனப்படுத்தி வருவதை, தி.மு.க., இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்ச்சி விகிதத்தை தமிழகத்துடன் ஒப்பிடுகையில் கேரளா, ஆந்திரா, குஜராத், கர்நாடக மாநில மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அம்மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளை, தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X