தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய சவுதி பொறியாளர்!

Updated : செப் 10, 2022 | Added : செப் 09, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை,:தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா கொப்பம்பட்டி கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர், 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார். அத்துடன், முதல்வர் தனிப் பிரிவுக்கு அவர்
தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய சவுதி பொறியாளர்!

சென்னை,:தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.


திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா கொப்பம்பட்டி கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர், 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார். அத்துடன், முதல்வர் தனிப் பிரிவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:நான் சவுதி அரேபியாவில் பொறியாளராக பணிபுரிகிறேன்; பொருளாதாரம் படிக்கிறேன். தமிழகத்தின் 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை செய்தி வழியே பார்த்தேன்.


அதில், 2023 மார்ச் 31 நிலவரப்படி, தமிழக அரசின் கடன் 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடி. அடுத்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, ஒவ்வொரு தமிழனின் மீதும் உள்ள தமிழக அரசின் கடன், 90 ஆயிரத்து 558 ரூபாய். இதை அறிந்து வருத்தம் அடைந்தேன். கடன் தீர என் பங்களிப்பை செலுத்த முடிவு செய்தேன்.

அதற்காக கடந்த ஆறு மாதத்தில், 90 ஆயிரத்து 558 ரூபாய் சேமித்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன். தமிழக அரசின் கடனை செலுத்த என் பங்களிப்பை பயன்படுத்தவும். தமிழகம் ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி
அடைகிறேன்.இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
10-செப்-202222:19:14 IST Report Abuse
venugopal s இது தமிழக பாஜகவினரின் வேலை.இவர்களே பாஜக ஆதரவாளர் ஒருவரை பிடித்து பணம் கொடுத்து இப்படி செய்யச் சொல்லி இருப்பார்கள்.
Rate this:
Cancel
vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-202220:01:50 IST Report Abuse
vigneshh அதையும் ஆட்டைய போட நினைக்கும் நம்ம திருட்டு மாடல் அரசு.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
10-செப்-202218:53:04 IST Report Abuse
Girija கொழுப்பு அதிகமானால் கொப்பளிக்க பன்னீர் கேட்குமாம் ........ இதை வைத்து ஊரில் நாலு லெட்ரின் அல்லது பள்ளிக்கூடத்திற்கு பென்ச் சேர் டேபிள் விளையாட்டு பொருட்கள் என்று வாங்கி கொடுத்திருக்கலாம் அல்லது எல்லா மாணவர்களுக்கும் காலனி வாங்கி கொடுத்திருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X