'பழனிசாமி புரூடா விடுகிறார்!'முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

Added : செப் 10, 2022 | |
Advertisement
மதுரை:''தி.மு.க., - எம்.எல்.ஏ., பேசுவதாக புரூடா விட வேண்டாம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரையில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மகன் தியானேஷ் - ஸ்மிர்தவர்ஷினி திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முன்னாள் முதல்வர் பழனிசாமி, சந்தடி சாக்கில் ஒரு காமெடியை கூறி வருகிறார். அதாவது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அவரிடம் பேசிக் கொண்டிருப்பதாக

மதுரை:''தி.மு.க., - எம்.எல்.ஏ., பேசுவதாக புரூடா விட வேண்டாம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரையில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மகன் தியானேஷ் - ஸ்மிர்தவர்ஷினி திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் பழனிசாமி, சந்தடி சாக்கில் ஒரு காமெடியை கூறி வருகிறார். அதாவது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அவரிடம் பேசிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களே உங்களிடம் பேசுவதில்லை. இதில், எங்கள் எம்.எல்.ஏ., பேசுவதாக புரூடா விட வேண்டாம்.
ஜெயலலிதா மறைந்த பின் லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி என, அனைத்து தேர்தலிலும் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது, பன்னீர்செல்வம் - பழனிசாமி என, இரண்டு அணிகளாக பிளவுபட்டு கிடக்கின்றனர். நீங்கள் இருக்கும் பதவியே 'டெம்ப்ரவரி' தான். இந்த பதவியை வைத்து, இன்னொரு கட்சியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள, இதுபோன்ற காமெடி கதைகளை இனி விடவேண்டாம்.மக்களுக்கு நல்லது செய்யவே நமக்கு நேரமில்லை. இப்படி திட்டமிட்டு செய்யக்கூடிய பொய் பிரசாரம் குறித்து கவலை வேண்டாம். இவ்வாறு முதல்வர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X