செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

Added : செப் 10, 2022 | |
Advertisement
அன்னுார்:தாசராபாளையம், செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள தாசராபாளையம் பழமையான கிராமம். இங்கு 200 ஆண்டு பழமையான செல்லாண்டி அம்மன், விநாயகர், பெரிய காண்டி அம்மன், அண்ணன்மார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, புதிதாக கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேக விழா, கடந்த 7ம் தேதி நவகிரக
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

அன்னுார்:தாசராபாளையம், செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள தாசராபாளையம் பழமையான கிராமம். இங்கு 200 ஆண்டு பழமையான செல்லாண்டி அம்மன், விநாயகர், பெரிய காண்டி அம்மன், அண்ணன்மார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, புதிதாக கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேக விழா, கடந்த 7ம் தேதி நவகிரக ஹோமத்துடன் துவங்கியது. அன்று மாலை முதற் கால வேள்வி பூஜை நடந்தது.
நேற்றுமுன்தினம் காலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை, மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜை, வேத பாராயணம், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தன.நேற்று அதிகாலையில் நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. யாகசாலையில் இருந்து விமானங்களுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டது. காலை 9:30 மணிக்கு, விமானங்கள், விநாயகர், செல்லாண்டி அம்மன், பெரியகாண்டி அம்மன், அண்ணன்மார் சுவாமி மற்றும் மாயவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து தசதானம், தச தரிசனம் நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X