ராகுல் துளிகள்| Dinamalar

ராகுல் துளிகள்

Added : செப் 10, 2022 | |
தமிழ் படிக்க ஆசை *புலியூர்குறிச்சியில் ராகுல் பேட்டியளித்த போது ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒரு நிருபர் தமிழில் நீளமான கேள்வியைக் கேட்க, அதை இன்னொருவர் மொழிபெயர்க்க முயன்றார். ஆனால், மொழிபெயர்ப்பைத் துவங்குவதற்கு முன்பே 'மைக்' பிடித்த ராகுல், ''நான் நிச்சயம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் ரொம்ப அழகான மொழி.

தமிழ் படிக்க ஆசை

*புலியூர்குறிச்சியில் ராகுல் பேட்டியளித்த போது ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒரு நிருபர் தமிழில் நீளமான கேள்வியைக் கேட்க, அதை இன்னொருவர் மொழிபெயர்க்க முயன்றார். ஆனால், மொழிபெயர்ப்பைத் துவங்குவதற்கு முன்பே 'மைக்' பிடித்த ராகுல், ''நான் நிச்சயம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் ரொம்ப அழகான மொழி. ஆனால் கற்றுக் கொள்வது கடினம்,'' என்றார்.

*காங்., தலைவர் பொறுப்புக்கு ராகுல் வரவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறினார். யாத்ராவில் வரும் தொண்டர்களுக்கு காலையில் இட்லி, பொங்கல் போன்ற உணவும், மதியம் வட இந்திய உணவும் வழங்கப்படுகின்றன.


* சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்த தருமபுரி மாவட்ட இளைஞர் காங்., செயலர் ஜீவா, போலீசார் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்தார்.


*புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமங்கலம் சமையல் குழுவினர் ராகுலை சந்தித்து அவருடன் நடந்து சென்றனர். கடந்த ஆண்டு இந்த குழுவினருடன் சேர்ந்து ராகுல் சமைத்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X