'பைக் ரோமியோக்கள்'இருவர் பிடிபட்டனர்

Added : செப் 10, 2022 | |
Advertisement
தேனாம்பேட்டை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தின் அருகில் நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பந்தயத்தில் ஈடுபட்டனர்.அப்போது அதில் ஒரு மாணவர், இருசக்கர வாகனத்தின் முன் பகுதியை துாக்கி 'வீலிங்' செய்தபடியே சென்றார். இதை அவரது நண்பர்கள் மொபைல் போனில் 'வீடியோ'வாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இந்த வீடியோ வேகமாக பரவியது. இது குறித்து

தேனாம்பேட்டை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தின் அருகில் நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பந்தயத்தில் ஈடுபட்டனர்.அப்போது அதில் ஒரு மாணவர், இருசக்கர வாகனத்தின் முன் பகுதியை துாக்கி 'வீலிங்' செய்தபடியே சென்றார். இதை அவரது நண்பர்கள் மொபைல் போனில் 'வீடியோ'வாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இந்த வீடியோ வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில், திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்களான முகமது ஹாரீஸ், 19, முகமது சாய்பான், 19, என தெரிய வந்தது.இதையடுத்து இருவரையும் நேற்று கைது செய்து போலீசார், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X