கே.பி.ஆர்.,கல்லுாரியில் மாநில இறகுப்பந்து போட்டி

Added : செப் 10, 2022 | |
Advertisement
கோவை;மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி, கே.பி.ஆர்., கல்லுாரியில் நேற்று துவங்கியது.கே.பி.ஆர்., கல்லுாரி சார்பில், கே.பி.ஆர்., கோப்பை 2022க்கான, மாநில அளவிலான போட்டி இரண்டு நாட்கள் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.போட்டியை, கல்லுாரியின் செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி துவக்கி வைத்தார். இதில்,மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட

கோவை;மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி, கே.பி.ஆர்., கல்லுாரியில் நேற்று துவங்கியது.கே.பி.ஆர்., கல்லுாரி சார்பில், கே.பி.ஆர்., கோப்பை 2022க்கான, மாநில அளவிலான போட்டி இரண்டு நாட்கள் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.போட்டியை, கல்லுாரியின் செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி துவக்கி வைத்தார். இதில்,மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மாணவ - மாணவியருக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.நேற்று நடந்த மாணவர் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதிப்போட்டியில், ஹரிபிரியன் 2 - 0 என்ற செட் கணக்கில் கவின்தரனையும்; இரண்டாவது காலிறுதியில், தரணிதரன் 2 - 0 என்ற செட் கணக்கில், குரு பிரசாதையும்; மூன்றாவது காலிறுதிப்போட்டியில், சச்சின் 2 - 0 என்ற செட் கணக்கில் ரூகனையும்; நான்காவது காலிறுதியில், ரவி வர்மன், 2 - 0 என்ற செட்கணக்கில் ஹரிஷையும் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X