ரூ. 4.79 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகள்

Added : செப் 10, 2022 | |
Advertisement
கோவை;மாநகராட்சி பகுதியில், 4.79 கோடி மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை, நகர்நல மையம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நேற்று துவங்கின.மாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட நல்லாம்பாளையம், ராமசாமி நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ரூ.99.10 லட்சம்மதிப்பீட்டிலும், கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான

கோவை;மாநகராட்சி பகுதியில், 4.79 கோடி மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை, நகர்நல மையம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நேற்று துவங்கின.மாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட நல்லாம்பாளையம், ராமசாமி நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ரூ.99.10 லட்சம்மதிப்பீட்டிலும், கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளை,மேயர் கல்பனா நேற்று துவக்கி வைத்தார்.தொடர்ந்து, 82 பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கியதுடன், அப்பள்ளியில் உள்ள கழிப்பிடங்கள் சுகாதாரமாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். அப்போது, குடற்புழு நீக்க மாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ரூ.16 லட்சம் செலவில் கழிப்பிடம், காந்திமாநகரில், ரூ.40 லட்சத்தில் பொதுக்கழிப்பிடம், ராமானந்தா நகர் மற்றும் எஸ்.பி.எஸ். நகரில், ரூ.29.60 லட்சத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம் அமைக்கும் பணியும் துவங்கப்பட்டன.ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை, கிழக்கு மண்டலம் சேரன்மாநகர் அம்பாள் நகரில், ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் என, ரூ.4.79 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணிகளை துவக்கிவைத்த மேயர், பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார்.முன்னதாக, சேரன்மாநகரில் துாய்மை பணியாளர்களுக்கு மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளுக்கு, தள்ளுவண்டிகளுக்கான புதிய குப்பை தொட்டிகளை மேயர் வழங்கினார். மண்டல தலைவர்கள் கதிர்வேல், தெய்வயானை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X