கிணற்றில் பாய்ந்த அதிவேக கார் கோவையில் 3 மாணவர்கள் பலி

Added : செப் 10, 2022 | |
Advertisement
தொண்டாமுத்துார்:அதிவேகமாக சென்ற கார் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், கல்லுாரி மாணவர்கள் மூவர் உயிரிழந்தனர். ஒரு மாணவர் நுாலிழையில் தப்பினார்.கோவை, வடவள்ளி, கல்பனா நகரைச் சேர்ந்தவர் விவேக் பாபு, 41; இவரது மகன் ஆதர்ஷ், 18. கோவை புதுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், வடவள்ளி, எஸ்.வி.நகரைச் சேர்ந்த ரோஷன், 19, திருவள்ளுவர்
கிணற்றில் பாய்ந்த அதிவேக கார் கோவையில் 3 மாணவர்கள் பலி

தொண்டாமுத்துார்:அதிவேகமாக சென்ற கார் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், கல்லுாரி மாணவர்கள் மூவர் உயிரிழந்தனர். ஒரு மாணவர் நுாலிழையில் தப்பினார்.

கோவை, வடவள்ளி, கல்பனா நகரைச் சேர்ந்தவர் விவேக் பாபு, 41; இவரது மகன் ஆதர்ஷ், 18. கோவை புதுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், வடவள்ளி, எஸ்.வி.நகரைச் சேர்ந்த ரோஷன், 19, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த நந்தனன், 17, நவாவூர் பிரிவைச் சேர்ந்த ரவி கிருஷ்ணா, 18 உட்பட 11 நண்பர்களுடன், ஆலாந்துறையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து, ஓணம் கொண்டாட சென்றுள்ளார்.

கல்லுாரியில் ரோஷனுக்கு தேர்வு இருந்ததால், ரோஷன், ரவி கிருஷ்ணா, ஆதர்ஷ், நந்தனன் ஆகிய நால்வரும், காலை, 5:40 மணிக்கு, விடுதியில் இருந்து புறப்பட்டு, 'இசுசு வி கிராஸ்' காரில் வந்து கொண்டிருந்தனர்; காரை ரோஷன் ஒட்டி வந்துள்ளார்.

தென்னமநல்லுார் மாரியம்மன் கோவில் அருகே சாலை வளைவில் திரும்பிய போது, அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, தனியார் தோட்டத்தில் இரும்பு கேட்டை உடைத்து, 120 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது.பெரும் சத்தத்துடன் கார் கிணற்றுக்குள் விழுந்ததை கண்ட அப்பகுதியினர், ஓடி வந்து பார்த்தபோது, ரோஷன் மட்டும் கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக அங்கிருந்த துாய்மை பணியாளர் செந்தில் மற்றும் சிலர் ரோஷனை மீட்டனர். ரோஷன் அளித்த தகவலின் படி, மேலும் மூவர் கிணற்றுக்குள் காரில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக, அங்கிருந்தவர்கள் தொண்டாமுத்துார் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

ரோஷன், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிணறு ஆழமாக இருந்ததால், கிரேன் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது. மூன்று மணி நேர தேடுதலுக்கு பின், ரவி கிருஷ்ணா, ஆதர்ஷ், நந்தனன் உடல்கள் மீட்கப்பட்டன; தொண்டாமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X