தாமிரபரணி பெயர் மாற்ற வழக்குஅரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Added : செப் 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை:தாமிரபரணி ஆற்றின் பெயரை, 'பொருநை ஆறு' என பெயர் மாற்றம் செய்ய தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தென்காசி பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி, திருநெல்வேலி,

மதுரை:தாமிரபரணி ஆற்றின் பெயரை, 'பொருநை ஆறு' என பெயர் மாற்றம் செய்ய தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தென்காசி பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. அதன் பெயர் வடமொழி சொல்லாக இருக்கிறது.சங்க கால இலக்கியங்கள், தமிழ் அறிஞர்களால், 'பொருநை ஆறு' என துாய தமிழ் பெயரால் அந்த ஆறு போற்றப்படுகிறது.

பாரதியார், 'காவிரி, தென்பெண்ணை, பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி' என, பாடலில் குறிப்பிட்டுள்ளார்.எனவே, தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை ஆறு என மாற்றம் செய்யக்கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன்; நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு மனுவை விசாரித்தனர்.'இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய, தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தொல்லியல் துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரு வாரங்கள் ஒத்தி வைக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran V - Chennai,இந்தியா
10-செப்-202218:56:31 IST Report Abuse
Ramachandran V கலிங்கத்துப்பரணி என்று ஒரு தமிழ் இலக்கியத்தின் பெயர் உள்ளதே. அதுவும் வாடா மொழி சொல்லா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X