மின்சார வாகன தினம் விழிப்புணர்வு பேரணி | Dinamalar

மின்சார வாகன தினம் விழிப்புணர்வு பேரணி

Added : செப் 10, 2022 | |
கோவை:உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு, மின்சார வாகனங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில், மின்சார வாகன பேரணி நடந்தது. பேரணியை, மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்ற நோக்கிலும், மின்சார வாகனங்கள் குறித்து பொது மக்களுக்கு
மின்சார வாகன தினம் விழிப்புணர்வு பேரணி

கோவை:உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு, மின்சார வாகனங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில், மின்சார வாகன பேரணி நடந்தது. பேரணியை, மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்ற நோக்கிலும், மின்சார வாகனங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாகவும், எஸ்.எஸ்.இ.எம்., கோவை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஓசோ டெக்., ஈக்கோ டைனமிக், இ -- ராய்ஸ், இ- மோட் எலக்ட்ரிக், ரூட்ஸ், புரோபெல் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பேரணியாக சென்றன. ரேஸ்கோர்ஸ் வருமானவரித்துறை அலுவலகத்தில் துவக்கி, ரேஸ்கோர்ஸ் பகுதியை மூன்று முறை சுற்றி வந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X