30 குடியிருப்பு பகுதிகளில் வீதி நுாலகம் ; போலீஸ் தீவிரம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
கோவை:''கோவை மாநகரில், 30 இடங்களில் வீதி நுாலகம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது,'' என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.கோவை மாநகர போலீஸ் சார்பில், குடிசைப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் வசதியாக, வீதி நுாலகம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி ரத்தினபுரி, கண்ணப்ப

கோவை:''கோவை மாநகரில், 30 இடங்களில் வீதி நுாலகம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது,'' என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.கோவை மாநகர போலீஸ் சார்பில், குடிசைப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் வசதியாக, வீதி நுாலகம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி ரத்தினபுரி, கண்ணப்ப நகர், ஏரிமேடு, அம்மன் குளம், புலியகுளம், பிள்ளையார்புரம், செல்வபுரம் உள்ளிட்ட, 77 குடிசைப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.இதேபோல, தொகுப்பு வீடுகளை கொண்டுள்ள 94 குடியிருப்புகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இந்த குடியிருப்புகளில், அறிவை வளர்க்கும் பயனுள்ள புத்தகங்களை கொண்ட நுாலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் வீதி நுாலகம் அம்மன் குளம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இதன் தொடர்ச்சியாக, மேலும் 30 இடங்களில் வீதி நுாலகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. புத்தகங்கள் வாங்கித்தரவும், புத்தகம் வைப்பதற்கான அடுக்குகள் செய்து தருவதற்கும், ஸ்பான்சர்கள் பலர் முன் வந்துள்ளனர்.இன்னும் ஒரு சில வாரங்களில், மாநகரில் வெவ்வேறு இடங்களில் வீதி நுாலகங்கள் தொடங்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் என்று, கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X