2026ல் எம்.பி.,தொகுதிகளை அதிகரிக்க திட்டம் இந்திய தேர்தல் கமிஷன் முடிவு

Added : செப் 10, 2022 | |
Advertisement
சிவகங்கை:லோக்சபா எம்.பி.,க்களின் எண்ணிக்கை 543 ல் இருந்து 846 ஆகவும், தமிழகத்தில் 39 தொகுதிகளை 48 ஆகவும் அதிகரிக்கும் திட்டத்தை 2026 ல் செயல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இந்தியாவில் 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை 137 கோடியே 30 லட்சம். மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.543 லோக்சபா

சிவகங்கை:லோக்சபா எம்.பி.,க்களின் எண்ணிக்கை 543 ல் இருந்து 846 ஆகவும், தமிழகத்தில் 39 தொகுதிகளை 48 ஆகவும் அதிகரிக்கும் திட்டத்தை 2026 ல் செயல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை 137 கோடியே 30 லட்சம். மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.543 லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து 846 தொகுதியாகவும், ராஜ்யசபா எம்.பி.,க்களின் எண்ணிக்கையும் 354 ஆக அதிகரித்து மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையை 1,200 ஆக அதிகரிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 65 லட்சமாக உள்ளது. அதன்படி 48 லோக்சபா எம்.பி.,க்களும், 20 ராஜ்யசபா எம்.பி.,க்களுமாக 68 பேர் இடம் பெற உள்ளனர். இந்த மறு சீரமைப்பு 2026ல் துவங்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X