'9 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க திட்டம்'

Added : செப் 10, 2022 | |
Advertisement
சூலூர்:"கோவை மாவட்டத்தில், 9 ஆயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது," என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது கூறினார். தமிழகத்தில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில்,
'9 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க திட்டம்'

சூலூர்:"கோவை மாவட்டத்தில், 9 ஆயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது," என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது கூறினார். தமிழகத்தில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில், மையப்படுத்தப்பட்ட உணவு சமைக்கும் கூடம் துவக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், இங்கு உணவு சமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது, கலெக்டர் சமீரனுடன் நேற்று ஆய்வு செய்தார். உணவு சமைக்கும் முறை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். உணவு பொருட்கள் எவ்வாறு சப்ளை செய்யப்படுகின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார். சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கோவை மாவட்டத்தில், உள்ள 70 பள்ளிகளை சேர்ந்த, 9 ஆயிரம் குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 62 மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த, 7 ஆயிரத்து, 255 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X