வண்ணம் தீட்டப்பட்ட சங்கு வளையல் கண்டெடுப்பு

Added : செப் 10, 2022 | |
Advertisement
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வில் அலங்காரத்துடன் கூடிய வண்ணம் தீட்டப்பட்ட சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வில் பல நிற பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சூதுபவளம், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால்
வண்ணம் தீட்டப்பட்ட சங்கு வளையல் கண்டெடுப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வில் அலங்காரத்துடன் கூடிய வண்ணம் தீட்டப்பட்ட சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வில் பல நிற பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சூதுபவளம், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாட்டு குவளை, பொம்மை, திமில் உடைய காளையின் சிற்பம், பெண் சிற்பம், வணிக முத்திரை, விலங்குகளின் எலும்புகள், கொம்பு, கோடாரி கருவிகள், தங்க அணிகலன் கிடைத்தன.

மேலும் சுடுமண்ணால் ஆன கற்களுடன் கூடிய சுவர் தென்பட்டுள்ளது.ஏற்கனவே சாதாரணமான சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது வண்ணம் தீட்டப்பட்ட சங்கு வளையல் கிடைத்துள்ளது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''இதுவரை முழுமையான வளையல்கள் கிடைக்கவில்லை.

உடைந்த வளையல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இங்கு வசித்த முன்னோர் சங்கு வாங்கி, வளையல்கள் தயாரித்து, ஏற்றுமதி செய்திருக்கலாம். அலங்காரத்துடனும், அழகிய வடிவங்களிலும் பொருட்கள் கிடைப்பதால், முன்னோர் கலை நயம் மிக்கவர்களாக இருந்தது தெரிய வருகிறது.,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X