வேளாண் பல்கலையில்தீவனப்பயிர் தின விழா

Added : செப் 10, 2022 | |
Advertisement
கோவை:வேளாண் பல்கலையின் தீவனப்பயிர் துறை சார்பில், காரீப் பருவ தீவனப்பயிர் தின விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், ''தமிழகத்தில் பால் உற்பத்தி, அதிகளவில் நடந்து வருகிறது. மாநிலத்தில், 5,360 லட்சம் கால்நடைகள் உள்ளன. தினமும் பால் உற்பத்தி, 206 லட்சம் லிட்டராக உள்ளது. இதில், 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளால் உற்பத்தி

கோவை:வேளாண் பல்கலையின் தீவனப்பயிர் துறை சார்பில், காரீப் பருவ தீவனப்பயிர் தின விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், ''தமிழகத்தில் பால் உற்பத்தி, அதிகளவில் நடந்து வருகிறது. மாநிலத்தில், 5,360 லட்சம் கால்நடைகள் உள்ளன. தினமும் பால் உற்பத்தி, 206 லட்சம் லிட்டராக உள்ளது. இதில், 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய பால் உற்பத்தி திறன், நான்கு சதவீதமாக உள்ளது. கறவை மாடுகளுக்கு சத்தான, சமச்சீரான தீவனப்பயிர்களை அளிப்பதன் மூலம், இதை ஏழு சதவீதமாக உயர்த்தலாம்,'' என்றார்.முன்னதாக, பயிர் இனப்பெருக்கம், மரபியல் மையம் இயக்குனர் ரவிகேசவன் வரவேற்றார். பயிர் மேலாண்மை இயக்குனர் கலாராணி, பயிர் பாதுகாப்பு இயக்குனர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X