'கண்காணிப்பு கேமரா பொருத்துங்ககுற்ற செயல்களை தடுக்க உதவுங்க!'

Added : செப் 10, 2022 | |
Advertisement
கோவை:''வியாபாரிகள், கண்காணிப்பு கேமராக்களை நிறுவி, போலீசாரின் குற்றத்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு உதவ வேண்டும்,'' என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் பழைய புத்தகக்கடைகள், ரெடிமேடு ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து

கோவை:''வியாபாரிகள், கண்காணிப்பு கேமராக்களை நிறுவி, போலீசாரின் குற்றத்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு உதவ வேண்டும்,'' என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் பழைய புத்தகக்கடைகள், ரெடிமேடு ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்த வீதியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், 16 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் திட்டத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், கமிஷனர் பேசியதாவது:விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. முக்கிய வியாபார மையங்களான உக்கடம், டவுன் ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் போன்ற இடங்களில் அமைந்துள்ள கடைகளுக்கு, வாடிக்கையாளர் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தை பயன்படுத்தி, திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும் என்பதால், போலீஸ் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இங்குள்ள வியாபாரிகள் இணைந்து, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல் அனைத்து பகுதி வியாபாரிகளும் ஒன்றிணைந்து தாங்களாகவே, தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில், சிசிடிவி கேமராக்களை பொருத்திக் கொள்ள வேண்டும். பண்டிகை காலங்களில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு, பேருதவியாக இருக்கும்.இவ்வாறு, போலீஸ் கமிஷனர் பேசினார். நிகழ்ச்சியில், போலீஸ் அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X