டிபாசிட் செய்தோர் புகார் கொடுக்க தயக்கம்நிதி நிறுவன மோசடி விசாரணை சுணக்கம்| Dinamalar

'டிபாசிட்' செய்தோர் புகார் கொடுக்க தயக்கம்நிதி நிறுவன மோசடி விசாரணை சுணக்கம்

Added : செப் 10, 2022 | கருத்துகள் (1) | |
வேலுார்:ஐ.எப்.எஸ்.சி. நிதி நிறுவனத்தில் 'டிபாசிட்' செய்த வேலுாரைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுக்க தயங்குவதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.வேலுார் மாவட்டம் காட்பாடி காந்தி நகரை தலைமையிடமாக வைத்து ஐ.எப்.எஸ்.சி. என்ற நிதி நிறுவனம் 2021 முதல் செயல்பட்டது.இங்கு 1 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்தால் மாதம் 8000 ரூபாய் வட்டி கொடுப்பதாக அறிவித்ததால்

வேலுார்:ஐ.எப்.எஸ்.சி. நிதி நிறுவனத்தில் 'டிபாசிட்' செய்த வேலுாரைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுக்க தயங்குவதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

வேலுார் மாவட்டம் காட்பாடி காந்தி நகரை தலைமையிடமாக வைத்து ஐ.எப்.எஸ்.சி. என்ற நிதி நிறுவனம் 2021 முதல் செயல்பட்டது.இங்கு 1 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்தால் மாதம் 8000 ரூபாய் வட்டி கொடுப்பதாக அறிவித்ததால் ஏராளமானோர் முதலீடு செய்தனர்.ஆறு மாதங்களுக்கு பின் யாருக்கும் வட்டி வழங்காமல் அந்த நிறுவனம் இழுத்தடித்தது;

கடந்த மாதம் அந்த நிதி நிறுவனத்தை மூடி நிர்வாகிகள் தலைமறைவாகினர்.வேலுார் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழகம் முழுதும் செயல்பட்டு வந்த அந்த நிதி நிறுவனத்தின் 45 அலுவலகங்களில் சோதனை நடத்தி டிபாசிட் செய்தவர்களின் விபரங்களை சேகரித்தனர்.அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் பெறப்பட்டிருந்தது தெரிந்தது.

போலீசார் கூறியதாவது:வேலுாரில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் ஊழியர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பலர் அதிகளவு முதலீடு செய்துள்ளனர். அவர்களிடம் கேட்டால் வருமான வரி பிரச்னைக்கு பயந்து புகார் கொடுக்க தயங்குகின்றனர்.டிபாசிட் செய்துள்ள ஏழைகள் 1256 பேர் மட்டும் புகார் கொடுத்துள்ளனர். இதுவரை இரண்டு ஏஜன்ட்டுக்கள் தற்கொலை செய்துள்ளனர்.வேலுாரை சேர்ந்த பலர் புகார் கொடுக்க தயங்குவதால் விசாரணையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X