ஜம்மு - காஷ்மீரில் பணிபுரியமத்திய அரசு விதிகள் தளர்வு

Added : செப் 10, 2022 | |
Advertisement
ஜம்மு - காஷ்மீரில் நிர்வாகத்தை மேம்படுத்தும் விதமாக ஐ.ஏ.எஸ். மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கான மாற்றுப்பணியமர்த்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.டில்லியில் நிருபர்களிடம் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் அரசு நிர்வாகத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து

ஜம்மு - காஷ்மீரில் நிர்வாகத்தை மேம்படுத்தும் விதமாக ஐ.ஏ.எஸ். மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கான மாற்றுப்பணியமர்த்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

டில்லியில் நிருபர்களிடம் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் அரசு நிர்வாகத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக இங்கு மத்திய அரசுப்பணிகளுக்கான கூடுதல் தேவை ஏற்பட்டு வருகிறது.இதற்காக பணியாளர் நலத்துறையின் கீழ் அமைந்துள்ள 'டெபுடேஷன் ரூல்ஸ்' எனப்படும் மாற்றுப் பணியமர்த்தல் விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் வாயிலாக மத்திய அரசு பணிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய சேவைப் பணியிடங்களில் பணிபுரியும் அதிகாரிகளை ஜம்மு காஷ்மீரில் பணியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஊக்கம் கிடைக்கும்.இந்த தளர்வு நடவடிக்கைகளால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22 உயர் அதிகாரிகள் ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு மட்டங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாக ஆட்சிப்பணியில் இருக்கும் அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். பணிகளுக்கு மாற்றுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் யு.பி.சி.எஸ்.சி. ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மத்திய பணியாளர் நலத்துறை தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் நிர்வாக ஆட்சிப்பணியில் இருந்து வந்த 16 அதிகாரிகள் பெருமை மிக்க இந்திய ஆட்சிப்பணியாக கருதப்படும் ஐ.ஏ.எஸ்.களாக ஆக்கப்பட்டுள்ளனர். இந்த அரிய வாய்ப்பை மேலும் எட்டு பேர் விரைவில் பெறவுள்ளனர்.

இதுதவிர ஜம்மு - காஷ்மீரில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு செல்ல விரும்பும் மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X