பி.ஏ.பி., இரண்டாம் மண்டலத்தில் பாசன நீர்...கடைமடைக்கு கிடைக்கல! கால்வாய்களை தூர்வாரினால் மட்டுமே தீர்வு

Added : செப் 10, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், கடைமடைக்கு சென்றடையவில்லை. பாசன நீர் வழங்கியும், கடைமடைக்கு கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்தில், பாசன பரப்பு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு போதிய மழை கிடைத்து

பொள்ளாச்சி:பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், கடைமடைக்கு சென்றடையவில்லை. பாசன நீர் வழங்கியும், கடைமடைக்கு கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்தில், பாசன பரப்பு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு போதிய மழை கிடைத்து பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.கடந்தாண்டை போன்று, இந்தாண்டும் பாசனத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும், முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.காண்டூர் கால்வாய் பணிகள் காரணமாக, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது. பாசனத்துக்கு எப்போது நீர் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.


நீர் திறப்பு


இதுகுறித்து, விவசாயிகளிடம் அதிகாரிகள் கருத்து கேட்டறிந்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி, கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.தண்ணீர் திறப்பை தொடர்ந்து, விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஒரு சுற்றுக்கு வழங்கப்படும் நீர் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதில், வடசித்துார் கால்வாய்க்கு உட்பட்ட பாசனப்பகுதியில், கடைமடைக்கு தண்ணீர் முறையாக சென்றடைவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


ஏமாற்றம்


விவசாயிகள் கூறியதாவது:திருமூர்த்தி அணையில் இருந்து, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதில், வடசித்துார் கிளை கால்வாய்க்கு உட்பட்ட செட்டிக்காபாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டனுார், பட்டணம் பகுதிகள் கடைமடையாக உள்ளன. இங்கு, 900 ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் பாசனம் பெறுகின்றன.இந்நிலையில், தண்ணீர் திறப்பையடுத்து, கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், முழுமையாக கிடைக்கவில்லை. முதல் சுற்றில், பட்டணம் கால்வாய் வழியாக, மூன்றரை நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால், கடைமடையை முழுமையாக தண்ணீர் சென்றடையவில்லை.இனி, அடுத்த சுற்று நீர் திறக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தென்னை மரங்களுக்கு நீர் கிடைக்காத சூழல் உள்ளது.இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால், தண்ணீர் திறப்புக்கு முன்பே, கிளை கால்வாய்களை துார்வார வேண்டும் என, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் நீரும் முறையாக கிடைக்காவிட்டால் விவசாயம் பாதிக்கும்.அடுத்த சுற்று தண்ணீர் திறப்பதற்கு முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாய்களை துார்வாரி கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


உறுதி செய்வோம்!


அதிகாரிகள் கூறுகையில், 'கடைமடை வரை கால்வாய்கள் துார்வாரப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக்கு பின், பாசனத்துக்கு தண்ணீர் செல்வதால், முதல் சுற்றில் அதிக நீர் விரயமாகியுள்ளது.ஆனாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்றுள்ளது. இதனை, பாசன சங்க தலைவர்களுடன் சென்ற ஆய்வு செய்துள்ளோம். அடுத்தடுத்து சுற்றுக்களில், கடைமடைக்கு தண்ணீர் சென்றடைவது உறுதி செய்யப்படும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X